மறைந்த முத்து சிவலிங்கத்தின் இறுதி ஊர்வலம்

Published By: Nanthini

25 Nov, 2022 | 09:46 AM
image

லங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவரும், மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதியுமான மறைந்த முத்து சிவலிங்கத்தின் பூதவுடல் நேற்று வியாழக்கிழமை (நவ 24) இறுதிக்கிரியைகளை தொடர்ந்து தகனம் செய்யப்பட்டது. 

அரசியல்வாதிகள், தொழிற்சங்கவாதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், கட்சி செயற்பாட்டாளர்கள், தொண்டர்கள் என நூற்றுக்கணக்கானோரின் பங்கேற்புடன் இறுதிக்கிரியைகள் நடைபெற்றன.

இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய ஆகியோரின் இரங்கல் செய்திகள் வாசிக்கப்பட்டன.

மூத்த அரசியல் தொழிற்சங்கவாதியும், முன்னாள் பிரதி அமைச்சருமான முத்து சிவலிங்கம் நேற்று முன்தினம் புதன்கிழமை (நவ 23) காலமானார்.

அதனை தொடர்ந்து முத்து சிவலிங்கத்தின் பூதவுடல் நுவரெலியாவில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.  

இந்நிலையில் நேற்று முத்து சிவலிங்கத்தின் இறுதி ஊர்வலம் இல்லத்திலிருந்து நுவரெலியா நகர் வழியே சென்று, அங்குள்ள கட்சி காரியாலயத்தை அடைந்து, பின்னர் நுவரெலியா பொது மயானத்தில் அன்னாரின் பூதவுடல் மாலை 5.30 மணியளவில் தகனம் செய்யப்பட்டது.

இறுதிக்கிரியையின்போது இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான், தவிசாளர் ராமேஷ்வரன் உள்ளிட்டோர் கட்சிக் கொடியை மறைந்த முத்து சிவலிங்கத்தின் உடலுக்குப் போர்த்தி அஞ்சலி செலுத்தினர்.  

அத்துடன் இந்திய தூதரக அதிகாரிகளும் இல்லத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தி, இரங்கல் புத்தகத்தில் குறிப்பெழுதினர்.

மேலும், தொழிலாளர் தேசிய சங்கம் உட்பட தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் பெருந்திரளான மக்கள் முத்து சிவலிங்கத்தின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகக் கல்வியியல்...

2024-04-18 20:23:36
news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08