காத்தான்குடியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் சொகுசு பஸ் மீது நேற்று  இரவு 10 மணியளவில்  இனந்தெரியாதோர் கல்வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இச்சம்பவம் வாழைச்சேனை, களுவன்கேணி பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதனால் பயணி ஒருவருக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளதுடன் பஸ்ஸின் கண்ணாடிகள் சேதமாகியுள்ளன.

தாக்குதலுக்குள்ளான பஸ் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு இது தொடர்பில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டதுடன் கொழும்பு பயணத்தை கைவிட்ட நிலையில் மீண்டும் பஸ் காத்தான்குடிக்கு சென்றது.

இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

-அப்துல் கையூம்