கத்தாரில் சாதிக்க துடிக்கும் முதலாவது உலக சம்பியன் உருகுவேயை தென் கொரியா இன்று எதிர்த்தாடுகிறது

Published By: Vishnu

24 Nov, 2022 | 06:21 PM
image

(நெவில் அன்தனி)

உலகக் கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் முதலாவது சம்பியன் பட்டம் உட்பட 2 சம்பியன் பட்டங்களை தன்னகத்தே கொண்டுள்ள உருகுவே எச் குழுவுக்கான தனது ஆரம்ப உலகக் கிண்ணப் போட்டியில் தென் கோரியாவை எட்யூகேஷன் சிட்டி விiயாட்டரங்கில் இன்று (24) மாலை சந்திக்கவுள்ளது.

அனுபவம் வாய்ந்த வீரர்கள் பலரையும் இளம் வீரர்களையும் கொண்டுள்ள உருகுவே, கத்தாரில் நடைபெறும் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் தனது 3ஆவது சம்பியன் படத்திற்கு குறிவைத்து விளையாடவுள்ளது.

1930இல் அங்குரார்ப்பண உலகக் கிண்ணப் போட்டியிலும் 20 வருடங்கள் கழித்து இரண்டாம் கட்ட லீக் முறையில் சம்பியன் தீர்மானிக்கப்பட்ட 1950 உலகக் கிண்ணப் போட்டியிலும் சம்பியனான உருகுவே, அதன் பின்னர் 60 வருடங்கள் கழித்தே அரை இறுதியில் முதல் தடவையாக விளையாடியிருந்தது.

உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் எப்போதும் எதிரணிகளுக்கு சவால் விடுக்கக்கூடிய அணியாக விளையாடி வந்துள்ள உருகுவே, இம்முறை எச் குழுவில் போர்த்துக்கல், கானா ஆகிய நாடுகளையும் எதிர்த்தாடவுள்ளது.

லூயிஸ் சுவாரெஸ், எடின்சன் கெவானி ஆகிய இருவரும் கடைசி நேரத்தில் உலகக் கிண்ண குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

உருகுவே அணியில் சிரேஷ்ட வீரராக இடம்பெறுபவர் லூயிஸ் சுவாரெஸ் ஆவார். எதிரணி வீரர் ஒருவரை சர்வதேச போட்டியின்போது கடித்ததன் காரணமாக 'கடிமன்னன்' என அழைக்கப்படும் சுவாரெஸ் தனது நான்காவதும் கடைசியுமான உலகக் கிண்ண அத்தியாயத்தில் விளையாடுகிறார்.

எனினும் உருகுவே அணியில் இம்முறை பிரதான வீரராக இடம்பெறுபவர் பெடரிக்கோ வெல்வேர்டே ஆவார். உலக கால்பந்தாட்ட அரங்கில் அதிசிறந்த மத்திய கள வீரர்களில் ஒருவராக   அவர்  விளங்குகிறார்.

அவர்கள் இருவரைவிட கோல்காப்பாளர் சேர்ஜியோ ரோஷே, முன்கள வீரர்களான டார்வின் நுனெஸ் மற்றும் எடின்சன் கெவானி ஆகியோர் முக்கிய வீரர்களாக இடம்பெறுகின்றனர்.

தென் கொரியா

இந்த வருட உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றும் ஆசிய நாடுகளில் அதிசிறந்ததும் பத்தாவது தடவையாக உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றுவதுமான தென் கொரியா, மீண்டும் ஒரு அசாத்திய திறமையை வெளிப்படுத்தி நொக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென் கொரிய தேசிய அணி வரலாற்றில் மிக நீண்டகாலமாக பயிற்றுநராக இருந்துவரும் பாவ்லோ பென்டோ தனது அணியை இம்முறை நல்ல நிலையில் இடுவதற்கு உறுதிபூண்டுள்ளார்.

இங்கிலாந்து அணித் தலைவர் ஹெரி கேனுடன் டொட்டன்ஹாம் ஹொட்ஸ்பர் அணியில் விளையாடிவரும் சொன் ஹியூங்மின் அணி தலைவராக விளையாடுகிறார்.

ஜப்பானுடன் 2002இல் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியை நடத்திபோது அரை இறுதிவரை முன்னேறி கடைசியில் 4ஆம் இடத்தைப் பெற்ற தென் கொரியா, 2012 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் வெண்கலப் பதக்கத்தை வென்றிருந்தது.

1954 உலகக் கிண்ணப் போட்டியில் முதலாவது ஆசிய நாடாக விளையாடிய பெருமையைக் கொண்ட தென் கொரியா, 2018 உலகக் கிண்ணப் போட்டியில் ஜேர்மனியை 2 - 0 என வீழ்த்தியிருந்தது.

இம்முறை ஆர்ஜன்டீனாவை சவூதி அரேபியாவும் (2 - 1), ஜேர்மனியை ஜப்பானும் (2 - 1) வெற்றிகொண்ட நிலையில் உருகுவேயை தென் கொரியா அதிர்ச்சியில் ஆழ்த்தும் என்ற எதிர்பார்ப்பு ஆசிய நாட்டவர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது. ஆனால் அது தென் கொரியாவுக்கு இலகுவாக அமையப் போவதில்லை.

அணித் தலைவர் சொன் ஹியூங்மின், முன்கள வீரர் ஹுவாங் உய்ஜோ, பின்கள வீரர் கிம் மிஞ்சாய், மத்திய கள வீரர்களான ஹுவாங் இன்பியோம் மற்றும் ஜுங் வூயொங் ஆகியோர் தென் கொரிய அணியில் மிக முக்கிய விரர்களாக இடம்பெறுகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35