ஓரினச்சேர்க்கையாளர்கள், பாலின மாற்றம் செய்தவர்கள் உட்படலானோர் அடங்கிய எல்ஜிபிடிகியூ (LGBTQ) சமூகத்தினருக்கு ஆதரவான பிரச்சாரங்களை தடை செய்வதற்கான சட்டமூலம் ரஷ்ய பாராளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது.
ரஷ்ய பாராளுமன்றத்தில் கீழு; சபையில் இச்சட்டமூலம் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.
பாரம்பரியமற்ற பாலியல் உறவுகள் தொடர்பான எந்த பிரச்சாரப் பொருளுக்கும் பின்விளைவுகள் இருக்கும் என ரஷ்ய பாராளுமன்ற கீழ் சபையின் சபாநாயகர் வியாசெஸ்லாவ் லொலோடின் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளால் பரப்பப்படும் இருளிலிருந்து, எமது பிள்ளைகளையும் நாட்டின் எதிர்காலத்தையும் இச்சட்டமூலம் பாதுகாக்கும் எனவும் அவர் கூறினார்.
உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டி நடைபெறும் கத்தாரில் ஒருபாலின உறவுகள் தண்டனைக் குரிய குற்றமாகவுள்ள நிலiயில், எல்ஜிபிடிகியூ சமூகத்தினருக்கு ஆதரவாக பிரச்சாரங்களை மேற்கொள்வதற்கு ஐரோப்பிய நாடுகளின் முயற்சிகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரஷ்ய பாராளுமன்ற கீழ் சபையில் நிறைவேற்றப்பட்ட இச்சட்டமூலத்துக்கு பாராளுமன்ற மேல் சபையும் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் அங்கீகாரம் அளிக்க வேண்டும். இப்படிமுறைகள் இலகுவாக நிறைவேற்றப்படும் எனக் கருதப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
வாயை பொத்திக்கொண்டு போஸ் கொடுத்த ஜேர்மனிய வீரர்கள்
வானவில் நிறம் கொண்ட ஆடையுடன் உலகக் கிண்ண அரங்கில் டென்மார்க் முன்னாள் பிரதமர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM