தென்பகுதி மீனவர்களினால் தொழிலை இழக்கும் நிலை : முல்லைத்தீவு மீனவர்கள் கவலை!

Published By: Raam

02 Dec, 2016 | 10:00 PM
image

(k .குமணன்)

முல்லைத்தீவு கடலில், சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் அவர்களது உடைமைகளை, மீன்பிடிக் காலம் முடிவடைந்ததும் பாதுகாப்பாக வைப்பதற்கான வசதிகள் காணப்படுவதாக தெரிவிக்கும் நாயாறு மற்றும் முகத்துவார பிரதேச மீனவர்கள், எனினும் பூர்வீகக் குடிகளான தமக்கு அந்த வசதிகள் இல்லையெனக் கவலை வெளியிட்டுள்ளனர்.  

முல்லைத்தீவு கரையோர கிராமங்களான நாயாறு மற்றும் முகத்துவாரம் உள்ளிட்ட பகுதிகளில் மீன்பிடியில் ஈடுபடும் தங்களது படகுகளை பாதுகாப்பாக வைப்பதற்கான வசதியை ஏற்படுத்தித் தருமாறும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.     

      

சீரற்ற காலநிலையைக் கருத்திற்கொண்டு மீனவர்களுடைய படகுகளை பாதுகாப்பான பகுதிகளுக்கு நகர்த்துமாறு நீரியல் வள திணைக்களத்தால் அறிவித்தல் விடுக்கப்பட்ட நிலையில், மீனவர்கள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.

நாயாறு மற்றும் முகத்துவாரப் பிரதேசங்களில் பரம்பரையாக மீன்பிடியில் ஈடுபட்டுவரும் தமக்கு, தமது படகுகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பாக வைப்பதற்கான எந்தவித வசதிகளும் இல்லையென்றும் கவலை வெளியிட்டுள்ளனர். 

தென் பகுதியில் இருந்து செல்லும் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களுக்கு தங்களது மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பாக வைப்பதற்கான வசதிகள் காணப்படுவதாகவும் மீனவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.  

இந்த விடயம் தொடர்பில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோரிடம் தெரிவித்த போதும் அவர்கள் எந்தவித பதிலும் கொடுக்கவில்லை என்றும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை யுத்தத்தில் அனைத்தையும் இழந்து மீண்டுவரும் தமக்கு, இயற்கை அனர்த்தால் இழப்புக்கள் ஏற்படுமாக இருந்தால் முழுப் பொறுப்பையும் மாவட்ட நீரியல் வள திணைக்கள அதிகாரிகளும், பிரதேச செயலகம், மாவட்ட செயலகம் என்பவை ஏற்க வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

முல்லைத்தீவு மாவட்டத்தில் யுத்தத்துக்கு பின்னர் தென்பகுதியை சேர்ந்த சிங்கள மீனவர்கள்  தமிழ் மீனவர்களின் மீன்பிடி தொழில் செய்யும் பிரதேசங்களில் அடாத்தாக வாடிகளை அமைத்து சட்டவிரோதமான முறையில் தொழிலை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38