முகவரி கேட்பது போல் நடித்து இளைஞனை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த 4 இளம் பெண்கள்

Published By: Digital Desk 2

24 Nov, 2022 | 12:36 PM
image

இந்திய பஞ்சாப் மாநிலத்தில் விலாசம் கேட்பது போல் நடித்து வீதியில் நடந்து சென்று இளைஞனை 4 இளம்பெண்கள் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த பரபரப்பான சம்பவம் தொடர்பில் அம்மாநில  பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பஞ்சாபில் ஜலந்தரில் உள்ள ஒரு பேக்டரியில் தொழிலாளியாக பணியாற்றும் நபர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பணியை முடித்துக் கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரை நோக்கி ஒரு கார் வேகமாக வந்துள்ளது. அந்த காரில் 20 வயது மதிக்கத்தக்க 4 இளம்பெண்கள் இருந்துள்ளனர்.

இதனையடுத்து காரில் இருந்த இளம்பெண்கள் ஒரு துண்டு சீட்டை நீட்டி அந்த நபரிடம் கொடுத்து முகவரி விவரம் குறித்து கேட்டுள்ளனர். அவர்கள் கூறியதை நம்பிய அந்த நபர் வாங்கி படித்துள்ளார். அப்போது அந்த பெண்கள் ஸ்பிரே ஒன்றை அவர் மீது அடித்துள்ளனர். இதனையடுத்து அவர் மயங்கி விழுந்துள்ளார். பின்னர் அவரை தங்களது காரில் ஏற்றிக்கொண்டு பறந்தனர்.

பின்னர் மறைவான இடத்தில் காரை நிறுத்தி அவரது கை, கால்களை கட்டி போட்டு அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனையடுத்து நேற்று அதிகாலை 3 மணி அளவில் அவரது கை மற்றும் கண்களை கட்டி ஏதோ ஒரு இடத்தில் இறக்கிவிட்டு சென்று விட்டனர்.

இதுகுறித்து அவர் செய்தி ஊடகங்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அந்த பெண்கள் பணக்காரர்கள் போல தெரிந்தவர்கள் என்றும் நன்றாக ஆங்கிலம் பேசினர் என்றும், தன்னிடம் 2 பெண்கள் பஞ்சாப் மொழியில் பேசினர் என அவர் கூறியுள்ளார். இதையடுத்து அந்த நபர் அந்த இளம்பெண்களைத் தேடும் பணியில்  பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

இரவு நேரங்களில் இது போல் ஒரு ஆணை கடத்திச் சென்று வண்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த 4 பெண்களும் போதையில் இருந்தனரா, எதற்காக இது போல் செய்தனர் என்பதெல்லாம்  பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொதுவாக பெண்களையும் சிறுமிகளையும் கடத்திச் சென்று தான் பலாத்காரம் செய்து வரும் நிலையில் ஆண் ஒருவரை இளம்பெண்கள் கூட்டாக பலாத்காரம் செய்யும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10