சீனாவில் அதிகரிக்கும் கொரோனா : கடுமையான கட்டுப்பாடுகளுக்கு அமுல்படுத்த தீர்மானம்

Published By: Digital Desk 2

24 Nov, 2022 | 10:42 AM
image

சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று வேகமெடுக்கத் ஆரம்பித்துள்ளது. இதனால் அங்கு பல்வேறு நகரங்களில் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமுலுக்கு வந்துள்ளதாகவும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 31,454 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டின் தேசிய சுகாதார வாரியம் தெரிவித்துள்ளது.

இவர்களில் 27 ஆயிரத்து 517 பேருக்கு நோய் தொற்றுக்கான அறிகுறிகள் எதுவும் காணப்படவில்லை. இந்த பாதிப்புகளால், அந்த நாட்டில் பெரிய அளவில் ஊரடங்குகளை விதிக்கவும், அதிக எண்ணிக்கையில் பரிசோதனைகளை நடத்தவும், பயண கட்டுப்பாடுகளையும் விதிக்கவும் அரசு ஆலோசனை செய்து வருகிறது.

எனினும், 140 கோடிக்கும் கூடுதலான மக்கள் தொகை கொண்ட அந்நாட்டில் இந்த எண்ணிக்கை மிக சிறிய விகிதத்திலேயே உள்ளது என கூறப்படுகிறது. சீனாவின் வுகான் நகரில் முதன்முதலில் கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸின் பாதிப்பு கண்டறியப்பட்டு உலகிற்கு தெரிய வந்தது.

அதன்பின்னர் 225-க்கும் கூடுதலான நாடுகளில் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டது. எனினும், ஊரடங்கு கட்டுப்பாடுகள், கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளால் உலக நாடுகள் தற்போது கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன.

இந்த நிலையில் சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், நேற்று சீனாவில் 29,390 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதில் 26,438 பேருக்கு அறிகுறி காணப்படவில்லை. அதற்கு முன்தினம் 28 ஆயிரத்திற்கும் கூடுதலானோருக்கு தொற்று பதிவானது. இதனால், கடந்த சில நாட்களாக தொடர்ந்து தொற்று அதிகரித்து காணப்படுகிறது.

சீனாவில் இதுவரை கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,226 ஆக உள்ளது. மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,93,506 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவில் நேற்று ஏற்பட்ட 29,390 என்ற கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது, ஏப்ரல் மத்தியில் பதிவான எண்ணிக்கைக்கும் கூடுதலாகும். பீஜிங் நகரில் சிறிய அளவில் பரவல் ஏற்பட்டாலும் கூட ஒட்டு மொத்த நகரமும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் சூழலும், நோயாளிகளை தனிமைப்படுத்துவதுடன், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் தனிமைப்படுத்தும் கடுமையான விதிகள் அமல்படுத்தப்படும்.

இதுபோன்ற காரணங்களால் மக்கள் உணவு வாங்க அல்லது மருத்துவ உதவிகளை நாட இயலாமல் போராட கூடிய சூழல் ஏற்படும். அந்நாட்டில் 3 ஆண்டுகளாக கொரோனா தொற்று பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி மக்களை பரிதவிப்பில் ஆழ்த்தி உள்ளது. உலகின் 2ஆவது பொருளாதார நாடு என்ற பெருமையையுடைய சீனா, மீண்டும் கொரோனா பெருந்தொற்றுக்கு இலக்காகி உள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08
news-image

பரப்புரைக்காக தமிழ்நாடு சென்ற ராகுல் காந்தி...

2024-04-15 13:08:34
news-image

நான் பொலிஸ் உத்தியோகத்தராக இருந்திருந்தால் எனது...

2024-04-15 12:53:59
news-image

தற்பாதுகாப்பு மற்றும் தாக்குதல் திட்டங்களிற்கு இஸ்ரேலிய...

2024-04-15 11:44:59