நிமல் லான்சா மீது தாக்குதல் நடத்த முயன்ற சமிந்த விஜேசிறி சபையிலிருந்து வெளியேற்றம்

Published By: Digital Desk 2

23 Nov, 2022 | 04:06 PM
image

(இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம்.வசீம்)

பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா மீது தாக்குதல் நடத்த முயன்ற ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் சமிந்த விஜேசிறியை சபையில் இருந்து சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன  வெளியேற்றினார்.

பாராளுமன்றத்தில் இன்று ( நவ.23) உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக எழுந்த சர்ச்சையின் போது,நிமல் லான்சாவுக்கும் சமிந்த விஜேசிறிக்கும் இடையே ஏற்பட்ட முறுகல் நிலைமையை தொடர்ந்து சபை முதல்வர் சுசில் பிரேமஜயந்த விடுத்த கோரிக்கைகளை தொடர்ந்தே சமிந்த விஜேசிறி சபையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான சர்ச்சையின் போது நிமல் லான்சா கூறுகையில்,

அரசாங்கம் என்ற வகையில் உள்ளூராட்சி தேர்தலை ஒத்தி வைப்பதற்கு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளேன்.

உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகம் என்று மக்கள் கூறுகின்றனர். அதனை குறைக்க வேண்டும் என்று மக்கள் கூறுவதாலேயே தொகுதிகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

அனைத்துக் கட்சிகளும் ஒரே மேசைக்கு வந்தால் தேர்தல் தள்ளிப் போகாது. இப்போதுள்ள முறைமை மிகவும் திரிபுபடுத்தப்பட்டதாக இருக்கின்றது. இதனால் இந்த முறைமையையே மாற்ற வேண்டும் என்றார்.

இவ்வேளையில் எழுந்த சமிந்த விஜேசிறி  இந்த பாராளுமன்றம் ஆளும் மற்றும் எதிர்க்கட்சியினருக்கு என்றே ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் எதிர்க்கட்சி பக்கத்தில் இருக்கும் இவர் எதிர்க்கட்சி பக்கமே செல்ல வேண்டியவர் என்றார்.

இவ்வேளையில் நிமல் லான்சாவுக்கும் சமிந்த விஜேசிறிவிற்கும்  இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில்  தேவையில்லாத பிரச்சினைகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என்று சபாநாயகர் அவர்களை பார்த்து எச்சரித்தார்.

இதன்போது இருவருக்கும் இடையிலான வாய்த்தர்க்கம் முறுகலாக மாறிய நிலையில்ஈ சமிந்த விஜேசிறி , நிமல் லான்சாவின் ஆசனத்தை நோக்கி சென்றார்

இவ்வேளையில், எழுந்த சபை முதல்வர் சுசில் பிரேமஜயந்தஈ இந்த சபையில் குறிப்பிட்ட உ றுப்பினர் மற்றைய உறுப்பினரை  தாக்குவதற்கு சென்றுள்ளார். இதனை அனுமதிக்க முடியாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33