ஆதரவாக வாக்களித்த உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை - ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி

Published By: Digital Desk 5

23 Nov, 2022 | 04:44 PM
image

(எம்.மனோசித்ரா)

கட்சி உறுப்புரிமை நீக்கப்படாது ஆனால் , மத்திய குழுவின் தீர்மானத்திற்கு முரணாக வரவு - செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

சு.க. தலைமையகத்தில் புதன்கிழமை (23) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உப தலைவர்களாக ஷான் விஜேலால் , முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பைசர் முஸ்தபா மற்றும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவை முற்போக்கான நியமனங்கள் ஆகும்.

எதிர்வரும் 4 ஆம் திகதிக்கு பின்னர் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும். இரு மாதங்களுக்குள் இந்நடவடிக்கைகளை முன்னெடுத்து , ஜனவரி 31 ஆம் திகதிக்குள் 10 இலட்சம் புதிய உறுப்பினர்களை கட்சியில் இணைத்துக் கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது. கட்சியின் உயர் பதவிகளில் காணப்பட்டோர் மாற்று தீர்மானங்களை எடுத்துள்ளனர் என்பதற்காக ஒருபோதும் கட்சியை முழுமையாக வீழ்த்தி விட முடியாது.

2019 இல் ஆட்சியைக் கையளிக்கும் போது 6 சதவீதமாகக் காணப்பட்ட பணவீக்கம் தற்போது 70 சதவீதமாக உயர்வடைந்துள்ளது. உணவு பணவீக்கம் 80.9 சதவீதமாக உயர்வடைந்துள்ளது. இந்த நிலைமையை மாற்றியமைக்கக் கூடிய எந்தவொரு வேலைத்திட்டமும் வரவு - செலவு திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை. எனவே தான் நாம் அதற்கு எதிராக வாக்களித்தோம்.

கட்சி உறுப்புரிமை நீக்கப்படாத ஆனால் , மத்திய குழுவின் தீர்மானத்திற்கு முரணாக வரவு - செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்திற்கு ஆதரவாக வாக்களித்த உறுப்பினர்களுக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.

சர்வதேச நாணய நிதியம் வழங்குவதாகக் குறிப்பிட்டுள்ள 2.9 பில்லியன்களைப் பெற்றுக் கொள்வதற்கான ஸ்திரமான வேலைத்திட்டம் கூட அரசாங்கத்திடம் இல்லை. எனவே தான் தற்போது இலாபமீட்டும் நிறுவனங்களை விற்று, பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதி முயற்சிக்கின்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33