2 வருடங்களுக்காவது போராட்டத்தில் ஈடுபடுவதை அனைவரும் தவிர்த்துக்கொள்ளுங்கள் - குமாரவெல்கம வேண்டுகோள்

Published By: Digital Desk 2

23 Nov, 2022 | 04:41 PM
image

(இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம்.வசீம்)

போராட்டத்தினால் பொருளாதார நெருக்கடிக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது. ஆகவே நாட்டை பற்றி சிந்தித்து குறைந்தபட்சம் இரண்டு வருடங்களுக்காவது போராட்டத்தில் ஈடுபடுவதை அனைவரும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

சர்வதேசத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் முதலில் பாராளுமன்றம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (நவ. 23) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம், பாராளுமன்றம் உள்ளிட்ட விடயதானங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சபைக்கு வருகை தந்து புரையோடிய பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை மகழ்வுக்குரியது.

அதிகார பகிர்வு தொடர்புக்கான பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க அனைத்து கட்சி தலைவர்களும் இணக்கம் தெரிவித்தமை வரவேற்கத்தக்கது.

1948ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையின் பொருளாதாரம் முன்னேற்ற நிலையில் இருந்தது. அக்காலப்பகுதியில் இலங்கையின் பொருளாதாரம் தோட்ட தொழிற்துறை அபிவிருத்தியை முன்னிலைப்படுத்தியதாக அமைந்தது.

அக்காலப்பகுதியில் 8 இலட்சம் குடும்பங்களில் ஒரு இலட்சம் பேர் மாத்திரம் நடுத்தர தரப்பினராக இருந்தார்கள். 3 இலட்சம் குடும்பங்கள் ஏழ்மை நிலையில் இருந்தன.

நட்டமடையும் அரச நிறுவனங்கள் தொடர்பில் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அரச நிறுவனங்களில் பெரும்பாலானோர் சேவையாற்றுகிறார்கள். அதற்கு 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் பொறுப்புக் கூற வேண்டும்.

அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் போது சேவையாளர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும், அதிக சேவையாளர்களுடன் அரச நிறுவனத்தை தனியார் நிறுவனம் பொறுப்பேற்காது.

தனியார் சேவை அனைத்தும் சிறந்தது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.52 அரச நிறுவனங்கள் குறுகிய இவ்வருடத்தின் காலத்திற்குள் 86 பில்லியன் நட்டத்தை எதிர்க்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளமை அவதானத்திற்குரியது.

வரி அதிகரிப்பினால் தகவல் தொழினுட்ப துறையில் உள்ளவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53