15 ஆண்டுகளில் 31 பெண்கள் மீது பாலியல் குற்றம் : 40 ஆண்டுகளுக்குப் பின் குற்றவாளி கண்டுபிடிப்பு

Published By: Digital Desk 2

23 Nov, 2022 | 12:53 PM
image

அவுஸ்திரேலியாவில், 15 ஆண்டுகளில் 31 பெண்களைக் குறிவைத்து பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக கூறப்படும் குற்றவாளியை, 40 ஆண்டுகளுக்குப் பிறகு  பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் 1985 - 2001 வரையிலான 15 ஆண்டுகளில் நடந்திருக்கிறது. ஆரம்பகால விசாரணையில், முதலில் பல்வேறு நபர்கள் இதில் ஈடுபட்டிருப்பதாக நம்பப்பட்டது. பின்னர் டி.என்.ஏ சோதனை மூலம், இதைச் செய்தவர் கீத் சிம்ஸ் என்பது தெரியவந்திருக்கிறது.

ஆரம்பத்தில் இந்தக் குற்றங்கள் தனித்தனியாக விசாரிக்கப்பட்டாலும் கூட 2001ஆம் ஆண்டு, 12 பாதிக்கப்பட்ட நபர்களின் டி.என்.ஏ சோதனை முடிவுகள் ஒரே மாதிரியானது என்பது கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, மற்ற 19 சம்பவங்களையும் பொலிஸார் இதனுடன் இணைத்தனர்.

இதில் பாதிக்கப்பட்டவர்கள் 14 - 55 வயதுடையவர்கள் என்று கூறப்படுகிறது. பின்னர் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அந்த நபரைப்பற்றி, 160 - 180 செ.மீ உயரம் கொண்டவர், கருமையான நிறமுடையவர், பழுப்பு நிற கண்கள், அகன்ற மூக்கு கொண்டவர் என்று ஒத்த விளக்கங்களைக் கூறியிருக்கின்றனர்.

அதைத் தொடர்ந்து 2019ஆம் ஆண்டின் தொடக்கத்தில் புலனாய்வாளர்கள், போலீஸ் தரவுத்தளத்தில் இது தொடர்பான டி.என்.ஏ பொருத்தத்தைக் கண்டுபிடித்தனர். இது சந்தேகத்துக்குரிய எண்ணிக்கையை 324 பேராகக் குறைத்தது.

அதையடுத்து ஒருவழியாகக் கடந்த செப்டெம்பரில், சிம்ஸிடமிருந்து ஏற்கெனவே இருந்து எடுக்கப்பட்டிருந்த டி.என்.ஏ மாதிரி, பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து எடுக்கப்பட்டவற்றுடன் சரியான பொருத்தமாக இருப்பது கண்டறியப்பட்டது.

கீத் சிம்ஸ் தான் குற்றவாளி என்று கண்டுபிடிக்கப்பட்டாலும், இவர் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதமே இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் சிம்ஸ், மிகவும் விரும்பத் தகுந்த தந்தை, தாத்தா மற்றும் சமூக உறுப்பினர் என குடும்ப மற்றும் நண்பர்கள் வட்டாரம் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13