ஹென்றியின் சாதனையை கிரூட் சமப்படுத்த அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது பிரான்ஸ்

Published By: Digital Desk 5

23 Nov, 2022 | 10:18 AM
image

(நெவில் அன்தனி)

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக அல் ஜனூப் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (22) நடைபெற்ற டி குழுவுக்கான உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் நடப்பு உலக சம்பியன் பிரான்ஸ் 4 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலகுவாக வெற்றிபெற்றது.

அப் போட்டியில் 2 கோல்களைப் போட்ட ஒலிவர் கிரூட், பிரான்ஸ் சார்பாக அதிக சர்வதேச கோல்களைப் போட்ட வீரர்கள் பட்டியலில் முதலிடத்தல் இருக்கும் தியரி ஹென்றியின் சாதனையை சமப்படுத்தினார்.

எனினும் அப் போட்டியில் அவுஸ்திரேலியா முதல் கோலைப் போட்டு பிரான்ஸை அசத்தியது.

மெத்யூ லெக்கி பரிமாறிய பந்தை க்ரெய்க் குட்வின் இலகுவாக கோலினுள் புகுத்தி 9ஆவது நிமிடத்தில் அவுஸ்திரெலியாவை முன்னிலையில் இட்டார்.

இந்த கோலினால் அதிர்ச்சி அடைந்த பிரான்ஸ், கோல் நிலையை சமப்படுத்த கடுமையாக போராடியது. இதன் பலனாக போட்டியின் 27ஆவது நிமிடத்தில் தியோ ஹேர்னெண்டெஸ் பரிமாறிய பந்தை பெனல்டி எல்லைக்குள் இருந்தவாறு ஏட்றியன் ரேபியட் தலையால் முட்டி கோல் நிலையை சமப்படுத்தினார்.

5 நிமிடங்கள் கழித்து ஏட்றியன் ரேபியட் பரிமாறிய பந்தை ஒலிவர் கிரூட் கோலாக்கி பிரான்ஸை முன்னிலையில் இட்டார். (2-1)

அதன் பின்னர் இடைவேளைவரை 5 கோல் போடும் முயற்சிகளை பிரான்ஸும் ஒரு கோல் போடும் முயற்சியை அவுஸ்திரேலியாவும் தவறவிட்டன.

இடைவேளையின் போது பிரான்ஸ் 2 - 1 என முன்னிலையில் இருந்தது.

இடைவேளைக்குப் பின்னர் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய பிரான்ஸ் கோல் போடுவதற்கு எடுத்த பல முயற்சிகள் இலக்கு தவறின.

போட்டியின் 66ஆவது நிமிடத்தில் உஸ்மான் டேம்பேல் பரிமாறிய பந்தை கிலியான் எம்பாப் தலையால் முட்டி பிரான்ஸின் 3ஆவது கோலை போட்டார்.

அடுத்த 3ஆவது நிமிடத்தில் கிலியான் எம்பாப் பரிமறிய பந்தை கோலாக்கிய ஒலிவர் கிரூட் தனது சர்வதேச கோல் எண்ணிக்கையை 52ஆக உயர்த்தி தியெரி ஹென்றியின் பிரான்ஸுக்கான சாதனையை சமப்படுத்தினார்.

போட்டியின் கடைசிக் கட்டத்தில் பிரான்ஸின் 2 கோல் போடும் முயற்சிகள் கைகூடாமல்போனது.

பின்கள வீரர் லூக்கஸ் ஹேர்னண்டஸ் உபாதையினால் உலகக் கிண்ணத்திலிருந்த வெளியேறினார்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின்போது முழங்காலில் கடும் உபாதைக்குள்ளான பிரான்ஸ் அணியின் சிரேஷ்ட பின்கள வீரர் லூக்கஸ் ஹேர்னண்டஸ் உலகக் கிண்ணப் போட்டியிலிருந்து வெளியேறினார்.

ஏற்கனவே கடந்த சனிக்கிழமை பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது பிரான்ஸின் அதிசிறந்த வீரர் கரிம் பென்ஸிமா உபாதைக்குள்ளாகி உலகக் கிண்ணப் போட்டியிலிருந்து வெளியேறியிருந்தார்.

போல் பொக்பா, எங்கோலோ கன்டே, ப்ரெஸ்னெல் கிம்ப்பெம்ப் ஆகியோரும் உபாதைக்குள்ளானதால் பிரான்ஸ் குழாத்தில் இடம்பெறவில்லை. இவை அனைத்தும் பயிற்றுநர் டிடியர் டெஸ்சாம்ப்ஸுக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்த போதிலும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றி ஆறுதல் அளித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35