ஆர்ஜென்டினாவை வீழ்த்தியதால் தேசிய விடுமுறையை அறிவித்தது சவூதி அரேபியா

Published By: Digital Desk 2

23 Nov, 2022 | 10:48 AM
image

உலக கோப்பை கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற சவூதி அரேபியா வெற்றியைக் கொண்டாடும் விதமாக இன்று (நவ.23) ஒருநாள் தேசிய விடுமுறை அறிவித்து சவூதி மன்னர் உத்தரவிட்டுள்ளார்.

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கோப்பை கால்பந்து போட்டி 1930 ஆம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது.  

இந்த நிலையில் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் 22ஆவது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்தத்தொடரில் நேற்று (நவ. 22) நடைபெற்ற ஆட்டத்தில் அர்ஜென்டினா, சவூதி அரேபியா அணிகள் மோதின.

ஆட்டம் ஆரம்பித்தது முதல் ஆதிக்கம் செலுத்திய அர்ஜென்டினா அணியினர் மிக சிறப்பாக விளையாடி கோல் வாய்ப்புகளை உருவாக்கினர் . ஆட்டத்தின் 10ஆவது நிமிடத்தில் அர்ஜென்டினா அணிக்கு பெனால்டி கிடைத்தது. இதனை சரியாக பயன்படுத்திய அணியின் கேப்டன் மெஸ்ஸி கோல் அடித்து அசத்தினார்.

இதனால் முதல் பாதி முடிவில் 1-0 என அர்ஜென்டினா முன்னிலை வகித்தது. தொடர்ந்து நடைபெற்ற 2ஆவது பாதி ஆட்டத்தில் ஆதிக்கம் செலித்திய சவூதி  அரேபியா அணியின் சலே அல்ஷெரி 48ஆவது நிமிடத்திலும், சலேம் அல்தாவசாரி 53ஆவது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இதற்கு பின்னர் பதிலடி கொடுக்க அர்ஜென்டினா அணி போராடியும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் முடிவில் 2-1 என சவூதி  அரேபியா அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில், சவூதி அரேபியா வெற்றியைக் கொண்டாடும் விதமாக நாடு முழுதும் இன்று ஒருநாள் தேசிய விடுமுறை அறிவித்து சவூதி  மன்னர் உத்தரவிட்டுள்ளார்.

சவுதி அரேபியா மன்னர் குடும்பத்தில் 150 பேருக்கு கொரோனா | Coronavirus  widespread among Saudi royal family | Puthiyathalaimurai - Tamil News |  Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32