சொத்துக்களை விற்பனை செய்வதன் மூலமாவது நெருக்கடிகளுக்கு தீர்வுகாண வேண்டும் - எஸ்.பி. திஸாநாயக்க  

Published By: Digital Desk 2

22 Nov, 2022 | 09:51 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

வரவு - செலவுத் திட்டத்திற்கு எதிராக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் எதிர்த்து வாக்களிக்க ப்பதற்கு தீர்மானித்துள்ள போதிலும் அரசாங்கத்திற்கு ஆதரவாக பாராளுமன்றத்தில்  வாக்குகள் கிடைக்கும்.

வாக்கெடுப்பின் போது வரவு - செலவுத் திட்டத்தை  வெற்றிக் கொள்வதில் அரசாங்கத்திற்கு எந்தவொரு சிக்கல்களும் இருக்காது.

மேலும் நெருக்கடிகளுக்கு தீர்வு காண முடியாது என்ற நிலை உருவாகும் போது வெளிநாட்டு கடன்களை பெற்று கொள்வதனை விடுத்து நாட்டில் உள்ள வளங்களை விற்பனை செய்வதன் ஊடாக குறித்த நெருக்கடிகளில் இருந்து மீண்டெழுவதற்கு முயற்சிக்க வேண்டும் என்று பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமை (நவ.21) ஸ்ரீலங்கா  பொதுஜன பெரமுனவின்  தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

அரச இலாபமிட்டும் நிறுவனங்களை தனியார் மயப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது என்று எதிர்க்கட்சி உள்ளிட்ட பலர் கூறுகிறார்கள். ஆம் உண்மையாகும். குறிப்பாக வெளிநாட்டு கடன்களை பெறாமல் நாம் பெற்ற கடன்களை மீளச் செலுத்துவதற்கு முயற்சி செய்திருக்கலாம். குறிப்பாக சீனா மற்றும் இந்தியாவிடம் பெறப்பட்ட கடன்கள் நல்லாட்சி அரசாங்கத்தில் பெறப்பட கடன்களாகும்.

 தற்போது நெருக்கடிகளுக்கு மத்தியில் அதிலிருந்து மீண்டு எழுவதற்கு போராடிக் கொண்டிருக்கிறோம். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது அதன் காரணமாக அந்நிய செலாவணியும் குறைந்துள்ளது. பணவீக்கம் அதிகரித்துள்ளது. பொருட்கள், சேவைகளின் விலைகள் அதிகரித்துள்ளது. மேலும் யுக்ரேன் -ரஷ்யா போர் எமக்கு பல்வேறு வழிகளில் தாக்கம் செலுத்தியுள்ளது.

இந்நிலையில் நாம் அந்நிய செலாவணி இருப்பினை  உறுதிப்படுத்தப்பட வேண்டும். பெற்றுக் கொண்ட கடன்களை 200 வீதத்தால் அதிகரித்துள்ளது. குறிப்பாக நாம் கடன்களை செலுத்தி அன்னியசெலவாணி இருப்பினை தக்கவைத்து கொள்ள முடியுமாயின் எமது பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியும். நாணயத்தினை உறுதியாக பேண முடியும்.சர்வதேச நாடுகளுடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதில் ஏற்படும் சிக்கல்களை இல்லாது செய்ய முடியும். இது சாதாரணமாக விடயமாகும்.

எதிர்காலத்தில் நெருக்கடிகள் தோன்றும் போது எம்மிடம் உள்ள சொத்துக்களை விற்பனை செய்வதன் மூலம் அதிலிருந்து மீண்டு எழ முடியும். மேலும் தொடர்ச்சியாக நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவது போன்று இலாபமிட்டும் நிறுவனங்களை தனியார் மயப்படுத்தவும்  வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு உள் வாங்குவதன் மூலம் அவர்களிடம் கிடைக்கும் டொலர்களை கொண்டு எமது பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும் முடியும். அதன் ஊடாக கடன்களை மீளச் செலுத்தி நெருக்கடியிலிருந்து மீள முடியும் என்றார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36