பிரிட்டனில் நடைபெற்ற ஷங்கவி யோகராஜாவின் ஆடற்கலை அரங்கேற்றம்

Published By: Ponmalar

22 Nov, 2022 | 03:43 PM
image

பார்போற்றும் கலைகளில் உயர்ந்தது, உன்னதமானது, தெய்வீகமானது, இன்றையஇளைய சந்ததியினராலும் விரும்பிப் பயிலப்பட்டு வருவது ஆடற்கலையாகிய பரதம்.

இதன் மூலம் கூத்து என்பதை கூத்த நூல் விளக்கி நிற்கின்றது. தமிழ்நாட்டில்தோற்றம் பெற்ற இந்த ஆடற்கலை இன்று உலகெங்கும் பரவி உள்ளமைஆசியக் கலைக்குக் கிடைத்த ஓர் உயர் மகுடம்.

மேலை நாட்டவர்களும் விருப்பம் கொண்டு இந்தப் பரதக் கலையைக் கற்றுவருகின்றார்கள். பிரிட்டனில் பிரித்தானியப் பெண்மணியே  பரதக்கலை ஆசிரியையாகத் திகழ்ந்து அக்கலையை மாணவ மணிகளுக்குப் பயிற்றுவித்து வருகிறார்.

இந்தப் பெருமைகளுக்கும், புகழுக்கும் பின்னணியாக  விளங்குபவர்கள் ஈழத்தமிழர்கள்  என்பதில்  நாமும்  மகிழ்வடையலாம்.

கொவிட் பெருந்தொற்றுக்காலம் கடந்த இரண்டரை  ஆண்டுகளை முடக்கியிருந்தது.  இந்தக்  காலகட்டத்தில் பரதக்கலை வகுப்புகளும், அரங்கேற்றங்களும் இடை நிறுத்தப்பட்டிருந்தன. இந்த இடைவெளி என்பது சிலமாணவர்களை இத்துறையிலிருந்து நிறுத்தியே விட்டது. ஆனால், ஆர்வமும்ஆசையும் கொண்ட  ஆடற்கலை மாணவமணிகள் தங்கள் ஆசிரியப்பெருந்தகைகளை நாடிச்சென்று மீண்டும் தமது கலைப்பயணத்தை ஆரம்பித்துக்கொண்டார்கள். அந்த வகையிலே இப்பொழுது பரதக்கலை அரங்கேற்ற நிகழ்ச்சிகள்   ஐரோப்பிய நாடுகளில் பரவலாக நடைபெற்று வருகின்றன.

கடந்த 12ஆம் திகதி சனிக்கிழமை (12.11.2022) அன்று, லண்டன் நடராஜா நர்த்தனாலயா நாட்டியக்கல்லூரி  அதிபர்,  குரு மதிவதனி பிரபாகரனின் மாணவி  ஷங்கவி யோகராஜா  அவர்களது   ஆடற்கலை அரங்கேற்றம் லண்டன் குறொய்டன் - ஆஷ்கொறொவ்ற் (Ashcroft) கலையரங்கில்   நடைபெற்றது.

சுவிட்ஸர்லாந்து நாட்டில் திருக்கோணேஸ்வரர் நடனாலயத்தை இயக்கி வருபவரும்,  நூற்றுக்கணக்கான  பரதக்கலை மாணவர்களைக் கொண்டிருப்பவரும், பல  பரதக்கலைக்கலைஞர்களை வளர்த்தெடுத்திருப்பவருமான தஞ்சைப்பல்கலைக்கழகத்தில்  பட்டம் பெற்ற  கலாநிதி சந்திரவதனி விஜயசுந்தரம் விழாவுக்குத் தலைமை தாங்கினார்.

இலங்கையின் புகழ் பெற்ற கர்நாடக இசை வித்தகி, ஆடற்கலை அரங்கேற்றங்களையும், இசை அரங்குகளையும் தன்வசப்படுத்திப்  புகழ்பெற்றஅம்பிகா தாமோதரம், பரதக்கலை அரங்கேற்ற நிகழ்ச்சிகளையும், கர்நாடக  இசைக்கச்சேரிகள் பலவற்றையும் தொகுத்து வழங்கி  வருபவரான, வழக்கறிஞர்-ஊடகவியலாளர், இலங்கை வானொலி – பி.பி.சி .தமிழோசை புகழ்விமல் சொக்கநாதன் அவர்களும் சிறப்பு அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

ஆடற்கலை அரங்கேற்றம் புரிந்த மாணவி, செல்வி ஷங்கவி யோகராஜா, லண்டன் பல்கலைக்கழகத்தின்  குயின் மேரிஸ் வளாகத்தில் இரண்டாம் ஆண்டில் படிக்கிறார்.

கொவிட் பெரும் தொற்றுக்குப் பின்னர் லண்டனில்  மெது மெதுவாக ஆரம்பித்துக்கொண்டிருக்கும் கலை  நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று.

குரு மதிவதனி பரதக்கலைக்கே உரிய பாவ நயத்துடன் நட்டுவாங்கம் செய்ய, இலங்கையில் புகழ் பூத்த இசைக்குடும்ப வாரிசு வை.யாதவன் கம்பீரக்குரலில்பாடல்களை மிக லாவகமாகப் பாடினார். எம்.பாலச்சந்தர்-மிருதங்கம், ரதீஸ்குமார் மனோகரன்-வயலின், ஞானவரதன் பிச்சையப்பா-வேய்ங்குழல், எஸ்.சிதம்பரநாதன்-மோர்சிங் இசைத்தனர்.

ஆடற்கலை அரங்கேற்ற நாயகி செல்வி ஷங்கவி யோகராஜா ஆரம்பம் முதல்நிறைவு வரை அவையோரை ஆடற்கலையுடன் கட்டிப்போட்டார் என்றால் அதுமிகையல்ல. அரங்கேற்றத்தின் ஒவ்வொரு உருப்படிகளையும் மிகச்சிறப்பாக உள்வாங்கி  ஆடல் புரிந்த  ஷங்கவி  யோகராஜா அவையோரின் பாராட்டை அவ்வப்பொழுது  கரவொலியாகப்பெற்றார்.

நிருத்தம்,நிருத்தியம்,நாட்டியம் என முப்பெரும் பிரிவுகளாக விரிந்திருக்கும் பரதக்கலையை   மாணவி ஷங்கவி யோகராஜாவுக்கு குரு மதிவதனி பிரபாகரன் அவர்கள்   பயிற்றுவித்த   பாங்கினை  ஆடற்கலை வல்லுனர்கள் அரங்கிலேயேபோற்றிப் புகழ்ந்தனர்.

மாணவி ஷங்கவி யோகராஜாவின் திறமைக்கேற்ப அவர்  அளிக்கை செய்வதற்கெனத்  தெரிவு செய்யப்பட்ட உருப்படிகள் பாராட்டுக்குரியவை. 

மதுரை உ.முரளிதரன் அவர்களின் ‘சிம்ம வாகிஸ’ ‘விஷமக்காரக் கண்ணன்’ ‘கண்ட நாள் முதலாய்க் காதல் கொண்டேன்’ ‘போ ஷம்போ’ கீர்த்தனம் ஜனரஞ்சகமானவை. 

இந்த அரங்கேற்ற நிகழ்ச்சி மூலம் ஷங்கவி யோகராஜா சபையோரை வெகுவாகக்கவர்ந்து கொண்டார்.

மதுரை முரளிதரனின் புதல்வியார் காவியா முரளிதரன், கலாநிதி சந்திரவதனிவிஜயசுந்தரம், சுமதி யசோதரன், விமல் சொக்கநாதன் ஆகியோர் அரங்கேற்ற நிகழ்ச்சியின் சிறப்புக்களை எடுத்துக் கூறினர்.

அரங்கேற்ற நாயகி செல்வி ஷங்கவி யோகராஜா தனது பெற்றோர்களை மேடைக்கழைத்து  மலர் மாலை சூட்டி வணங்கி, அவர்களை அருகில்வைத்துக்கொண்டே (வழக்கமான ஆங்கிலத்தில் அல்லாமல்) கொச்சைத் தமிழில்வழங்கிய நன்றியுரை பாராட்டுக்குரியது. மேலைநாடுகளில் வாழ்ந்து வரும் தமிழ்இளையோர்கள் தமிழ் பேச முன்வருவது வரவேற்கப்படவேண்டியது. அவர்கள் தமிழ்பேசும் பொழுது ஆங்கிலம் கலந்தோ,பிரெஞ்சு கலந்தோ, நொஸ்க், டெனிஸ்கலந்தோ பேசினால் அதனைத் தற்பொழுது தடுத்து விடக்கூடாது. நாளை அவர்கள் நற்றமிழ்  பேசுவார்கள்.  இவ்வாறான இளம் தலைமுறை தமிழ் பேசாமல் விடுவதுதான் ஆபத்தானது. அதிலும்,  ஷங்கவி உதாரணமாக விளங்கியிருக்கிறார்.

மொத்தத்தில் அன்றைய மாலைப்பொழுது மனோகரமாகக்  கழிந்தது. 

 .-எஸ்.கே.ராஜென்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகக் கல்வியியல்...

2024-04-18 20:23:36
news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08