வாகரை கண்டலடியில் மாவீரர் துயிலும் இல்லம் சிரமதானம்

Published By: Vishnu

22 Nov, 2022 | 02:49 PM
image

தமிழ் தேசிய மாவீரர் நாள் கார்த்திகை -27 ஜ முன்னிட்டு மட்டக்களப்பு வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்ல துப்பரவு பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

கடந்த 2019 ஆண்டிற்கு பின்னர் 3 வருடங்கள் கடந்த நிலையில் காடு படர்ந்து காணப்பட்ட இடங்களை சிரமதானப் பணியின் மூலம் வாகரை பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்த பொதுமக்கள் துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் இடம்பெற்ற இறுதி யுத்தத்தினை தொடர்ந்து  ஜனவரி 23, 2007ஆம். ஆண்டு காலப்பகுதியில் வாகரை பிரதேசம் அரச கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அங்கிருந்த மாவீரர் துயிலும் இல்லம் அங்கிருந்து அகற்றப்பட்டது.

மேற்படி மாவீரர் துயிலும் இல்லத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகியோர் சென்று சிரமதானப் பணியினை பார்வையிட்டதுடன் அன்றைய நாளில் பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பான முன்னேற்பாடு நடவடிக்கைகள் தொடர்பாக ஏற்பாட்டுக் குழுவினருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது தெரிவித்ததாவது

எமக்கான உரிமைகளில் இதுவும் ஒன்று எமது அரசியல் உரிமைக்காக  விடுதலைக்காக போராடியவர்களை அவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் உணர்வு பூர்வமாக நினைவு கூரும் இந் நிகழ்வானது எதிர்வரும் காலங்களில் எவரிடமும் அனுமதி கூறி செயல்படுத்தும் நிகழ்வாக இருக்கக் கூடாது. இது எமக்கான உரிமையாகும். எமது சுதந்திரத்தினை அரசு கட்டுப்படுத்தக் கூடாது என்றார்.

இதேபோன்று முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவிக்கும்போது இறந்தவர்களை நினைவு கூருவது சர்வதேச விதி முறையாகும். 

இவ்விடயம் சர்வதேச சட்டத்தில் உள்ளது. ஆகவே தான் தங்களது இறந்த உறவுகளை கடந்த காலமாக மாவீரர் தினமாக நினைவு கூருகிறார்கள். 

அண்மைக்காலத்தில் சிலர் கார்த்திகை 27 ஆம் திகதியை மாவீரர் தின நாளை கார்த்திகை 20 ஆம் திகதியாக மாற்ற நடவடிக்கை எடுக்கிறார்கள் என்று அறிந்தேன். அதற்கு ஒரு போதும் அனுமதிக்க முடியாது. 

சிலர் இது தொடர்பாக அறிக்கை விட்டிருந்தனர். பின்னர் அது நிராகரிக்கப்பட்டது. முன்னைய ஜனாதிபதிகளான மகிந்த இராஜபக்ஷ கோட்டபாய ராஜபக்ஷ ஆகியோர்கள் நினைவேந்தல்களுக்கு தடை விதித்தனர். 

பாதுகாப்பு தரப்பினர் பல்வேறு வழிகளிலும் தடை விதித்தனர். தற்போது நாட்டின் ஜனாதிபதியாக  ரணில் விக்கிரமசிங்க இருப்பதனால் இதனை நடாத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளார்.

அதேபோன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும் நடைபெற்றது. எனவேதான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களை பாராட்டுகின்றேன் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43