நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் தனியார் பஸ் பணிபகிஷ்கரிப்பு காரணமாக பாடசாலை மாணவர்கள், அரச ஊழியர்கள் மற்றும் பயணிகள் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்குகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பித்துள்ள இந்த பணிபகிஷ்கரிப்பு காரணமாக மலையகத்தில் ஹட்டன், பொகவந்தலாவ, நோர்வுட், மஸ்கெலியா, தலாவாக்கெலை, நுவரெலியா, டயகம போன்ற பகுதிகளில் பயணிகள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

25000 ரூபா தண்ட பணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மலையத்திலும் தனியார் பஸ் சங்கம் தொழில் சங்க நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

- சதீஸ்,மு.இராமச்சந்திரன்