இந்தியாவில் வீட்டில் சேமித்து வைத்திருக்கும் பணம், வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட பணம், வருமான வரி கட்டிய பணத்தில் தங்கம் வாங்கியிருந்தால், வரி விதிக்கப்படாது என மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட வருமான வரி சட்டம் தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் அளித்த விளக்கம்: 

புதிய வருமான வரிசட்டத்தில், நகைகளுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை. வருமான வரி சட்டம் 1961 ன் கீழ் பழைய வரிகளே தொடரும். வருமானத்துறை சோதனையின் போது, கூடுதல் தங்கத்திற்கு 60 சதவீத வரி விதிக்கப்படும். 

முன்னர் 30 சதவீதமாக இருந்த வரி 60 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. பழைய சட்டத்தின்படி திருமணமான பெண்கள் 62.5 பவுன் நகை வைத்திருக்கலாம். திருமணமாகாத பெண்கள் 31.25 பவுன் நகை வைத்திருக்கலாம். ஆண்கள் 12.5 பவுன் நகை வைத்திருக்கலாம். 

இந்த நகைகள், கணக்கு காட்டிய பணத்திலிருந்து வாங்கப்பட்டிருந்தால், விவசாய வருமானத்தில் இருந்து வாங்கப்பட்டிருந்தால் வரி விதிக்கப்படாது. பாரம்பரிய நகைகளுக்கும் வரி விதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.