உரையாற்றிக்கொண்டிருந்த போது பொலிஸ்மா அதிபருக்கு வந்த அழைப்பால் சர்ச்சை (காணொளி இணைப்பு)

Published By: MD.Lucias

01 Dec, 2016 | 08:03 PM
image

இரத்தினப்புரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு வந்த தொலைபேசி அழைப்பொன்றுக்கு அவர் பதிலளித்த விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இரத்தினப்புரி பகுதியில் நேற்று நடைபெற்ற பொலிஸ் தின நிகழ்வொன்றில் பொலிஸ் மா அதிபர் கலந்துகொண்டிருந்த போது அவருக்கு வந்த தொலைபேசி அழைப்புக்கு அவர் பதிலளிக்கும் அவர் கதைப்பது அங்கிருந்த ஒலிவாங்கி மூலம் வெளியில் கேட்டுள்ளது.

'குட் மோர்னிங் சேர் .. அவசர விடயமா சேர்.. நான் உங்களுக்கு மீண்டும் தொலைபேசி அழைப்பை மேற்கொள்கிறேன். 

குறித்த விடயம் தொடர்பாக பரீட்சித்து பார்க்க கூறினேன். எப்.சி.ஐ.டி பணிப்பாளர் என்னை வர சொன்னார். ஆனால் எனக்கு என்னால் போக முடியவில்லை.

கொஞ்சம் நேரத்தில் எனக்கு அது கிடைக்கும். கிடைத்தவுடன் தகவல்களுடன் வந்து சேரை  சந்திக்கின்றேன்.

 அது நிலமேஸ் மேட்டர். கட்டாயம் அவரை கைது செய்யமாட்டோம். என்னுடை அனுமதி இல்லாமல் கைது செய்ய வேண்டாம் என பணிப்பாளருக்கு தெரிவித்துள்ளேன். நிச்சயமாக அவர் கைது செய்யப்படமாட்டார்.

இல்லை இல்லை. அது தொடர்பாக கேட்டுப் பார்த்தேன். ஓகே சேர்' என அவர் அந்த தொலைபேசி அழைப்புக்கு பதிலளித்துள்ளார்.

இந்நிலையில் அவரின் தொலைபேசி உரையாடல் தொடர்பாக இன்றைய தினம் பாராளுமன்றுக்கு வருகை தந்த ஜனாதிபதியிடம் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

அதற்கு பதிலளித்துள்ள ஜனாதிபதி ,

இரத்தினபுரியில் நடைபெற்ற பகிரங்க கூட்டமொன்றில் பொலிஸ் மா அதிபருக்கு வந்த தொலைபேசி அழைப்பு எடுக்கப்பட்டு அவருக்கு பணிப்புரைகள் வழங்கப்பட்ட காணொளி காட்சியை நானும் பார்த்தேன்.  அது தவறானது. அது குறித்து விளக்கம் கோரவுள்ளேன்  என  சபையில் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37