லிந்துலை நாகசேனை அகரகந்த தோட்டத்தில் இயங்கி வரும் பாரதி மொழிசங்கத்தின் 05 ஆண்டு நிறைவு விழா நேற்று சங்கத்தின் தலைவர்  கு.மோகன்ராஜ்  தலைமையில் தோட்ட கலாசார மண்டப திடலில் நடைபெற்றது. 

இவ்விழாவில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ், லிந்துலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.செல்வகுமார், தேசிய மொழிகள் ஒருமைபாட்டு அமைச்சின் பிரத்தியோக செயலாளர் ஜோதிவேல், தோட்ட அதிகாரி தாரக்க விஜயவர்தன ஆகியோர் கலந்துகொண்டனர்.