ஆண் அழகன் போட்டியில் பறிபோனது வெற்றி வாய்ப்பு ; நடுவரை தூக்கி வீசிய போட்டியாளர் (வீடியோ இணைப்பு)

Published By: Raam

01 Dec, 2016 | 05:20 PM
image

கிரேக்கத்தின் எதன்ஸ் நகரில் இடம்பெற்ற ஆண் அழகன் போட்டியின் போது வெற்றி வாய்ப்பை தவரவிட்ட போட்டியாளர் ஒருவர் கோபத்தில் நடுவரை தூக்கி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எதன்ஸ் நகரில் இந்த ஆண்டுக்கான வைர கிண்ண ஆண் அழகன் போட்டி நடைபெற்றது. 

இதில் கிரேக்கத்தின் பிரபல ஆண் அழகர்களில் ஒருவரான கியான்னிஸ் மேகோஸ் என்பர் 100 கிலோவுக்கான போட்டியாளர்களில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

தொடர்ந்து நடைபெற்ற போட்டிகளிலும் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் எதிர்பார்ப்புடன் இருந்துள்ளார்.

ஆனால் நடுவர்கள் வெற்றியாளராக வேறொரு நபரை தெரிவு செய்து அறிவித்துள்ளனர்.

இதில் ஆத்திரம் கொண்ட கியான்னிஸ் நடுவர்களை தாக்கத் துவங்கியுள்ளார். கிரேக்கத்தில் மிகவும் பிரபலமானவரும்  ஆண் அழகர்களால் மரியாதை அளித்து வருபவருமான அர்மாண்டோ மார்க்வெஸ் என்ற நடுவரை கியான்னிஸ் தூக்கிய வீசிய சம்பவம் அங்கிருந்த பார்வையாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right