இந்திய கடற்படை தளபதி அட்மிரல்  சுனில் லன்பா கிழக்கு கடற்படை தளத்திற்கு நேற்று (30) விஜயம் செய்துள்ளார்.

இவரை இலங்கை கடற்படை தளபதி வைஸ் எட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன மற்றும் கிழக்கு கடற்படை கட்டளை தளபதி டிராவிஷ் சின்ஹா ஆகியோர் வரவேற்றுள்ளனர்.

 

இந்நிலையில் வருகைத்தந்துள்ள இந்திய கடற்படை தளபதி இலங்கை கடற்படையைச் சேர்ந்த 123 கடற்படை அதிகாரிகள் மற்றும் 148 மாலுமிகளுக்கு இந்தியாவின் பல்வேறு கல்வி நிறுவனங்களில்  கற்கைநெறிகளில் ஈடுபடும் வாய்ப்பினை பெற்றுத்தருவதாக தெரிவித்துள்ளார்.

இந்திய கடற்படை  தளபதி திருகோணமலை துறைமுகம்,  கடற்படை அருங்காட்சியகம் மற்றும் கோணேஸ்வர ஆலயம் என்பவற்றுக்கு விஜயம் செய்துள்ளார்.