ஆரம்பப் போட்டியில் தோல்வி அடைந்த முதலாவது வரவேற்பு நாடு கத்தார் !

Published By: Digital Desk 5

21 Nov, 2022 | 09:42 AM
image

(நெவில் அன்தனி)

பீபா உலகக் கிண்ண கால்பந்தாட்ட 22ஆவது அத்தியாயத்தின் ஏ குழுவுக்கான ஆரம்பப் போட்டியில் வரவேற்பு நாடான கத்தாரை 2 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் ஈக்வடோர் வெற்றிகொண்டது.

உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் ஆரம்பப் போட்டியில் தோல்வி அடைந்த முதலாவது வரவேற்பு நாடு கத்தார் ஆகும்.

92 வருட உலகக் கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் இதற்கு முன்னர் வரவேற்பு நாடுகள் 16 வெற்றிகளை ஈட்டியதுடன் 6 போட்டிகளை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டிருந்தன.

தோஹாவிலிருந்து 50 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள அல் கோர் நகரில் அமைந்துள்ள அல் பெய்த் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (20) இரவு நடைபெற்ற அப் போட்டியின் முதலாவது பகுதியில் அணித் தலைவர் என்னர் வெலென்சியா போட்ட 2 கோல்களே ஈக்வடோரின் வெற்றியில் முக்கிய பங்காற்றின.

போட்டியின் முதலாவது பகுதியில் ஆதிக்கம் செலுத்திய ஈக்வடோர் சார்பாக 3ஆவது நிமிடத்தில் வெலென்சியா போட்ட கோல், வீடியோ உதவி மத்தியஸ்தரின் மீளாய்வுக்குப் பின்னர் ஓவ் சைட் என மத்தியஸ்தரினால் அந்த கோல் நிராகரிக்கப்பட்டது.

எனினும் போட்டியின் 16ஆவது நிமிடத்தில் ஈக்வடோர் அணித் தலைவர் வெலென்சியாவை தனது பெனல்டி எல்லைக்குள் வைத்து கத்தார் கோல்காப்பாளர் சாத் அல் ஷீப் முரணான வகையில் வீழ்த்தியதால் ஈக்வடோருக்கு பெனல்டி வழங்கப்பட்டது.

அந்த பெனல்டியை எடுத்த வெலென்சியா மிக லாவகமாக பந்தை வலது கோல் பகுதிக்குள் புகுத்தி ஈக்வடோரின் முதலாவது கோலைப் போட்டார்.

இதன் மூலம் 2022 பீபா உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் முதாலவது கோல் பெனல்டி கோலாக அமைந்தது.

15 நிமிடங்கள் கழித்து ஏஞ்சலோ ப்ரெசியாடோ வலது புறத்திலிருந்து உயர்வாக பரிமாறிய பந்தை நோக்கி தாவிய வெலென்சியா தனது தலைவயால் பந்தை முட்டி அலாதியான கோல் போட ஈக்வடோர் 2 - 0 என முன்னிலை பெற்றது.

எனினும் அதன் பின்னர் ஈக்வடோர் கோல் போட எடுத்த முயற்சிகள் கைகூடாமல் போக இடைவேளையின்போது அவ்வணி 2 - 0 என்ற கோல்கள்  கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இடைவேளையின் பின்னர் வித்தியாசமான அனுகுமுறைகளுடனும் வியூகங்களுடனும்  விளையாடிய   கத்தாரின் நோக்கம் எல்லாம் மேலதிக கோல்களை எதிரணிக்கு விட்டுக்கொடுக்கக் கூடாது   என்பதாகவே இருந்தது. அதில் கத்தார் வெற்றியும் கண்டது.

போட்டியின் இரண்டாவது பகுதியில் ஈக்வடோருக்கு கோல் போடுவதற்கு ஓரிரு வாய்ப்புகள் கிடைத்த போதிலும் அவற்றை அவ்வணி விரர்கள் முறையாகப் பயன்படுத்த தவறினர்.

அப் போட்டியில் கத்தார் 2 கோல்கள் பின்னிலையில் இருந்ததால் அரங்கில் குழுமியிருந்த அந் நாட்டு இரசிகர்களில் பெரும்பாலானவர்கள் போட்டி முடிவடைவதற்கு முன்னரே ஆசனங்களை காலிபண்ணிவிட்டு வெளியேறிவிட்டனர்.

கத்தார் அணியைச் சேர்ந்த கோல்காப்பாளர் சாத் அல் ஷீப், கே. பௌடியாப், ஏ. அலி, ஏ. அபிப் ஆகியோருக்கும் ஈக்வடோர் அணியைச் செர்ந்த எம். கெல்சீடோ, எஸ். மெண்டெஸ் ஆகியோருக்கும் மஞ்சள் அட்டை காட்டப்பட்டது.

கத்தார் - ஈக்வடோர் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு முன்னர் ஆரம்ப விழா வைபவம் நடைபெற்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21