வாகனங்களுக்கு வழங்கப்படும் வீதி அனுமதிப் பத்திரத்தை (route permit) முச்சக்கர வண்டிகளுக்கும் வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காத்தான்குடி முச்சக்கர வண்டி சாரதிகளினால் இன்று காத்தான்குடி நகரில் பாரிய ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டன பேரணி என்பன நடாத்தப்ப்பட்டன.

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் கிழக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் புதிதாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள முச்சக்கர வண்டிகள் பயணிக்கும் வீதி அனுமதி பத்திரத்திற்கு எதிர்புத் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இலங்கையின் எப்பகுதியிலும் நடைமுறையில் இல்லாமல் இருக்கும் இப்பதிவினை மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த நடைமுறை இலங்கை முழுவதும் அமுல்படுத்தும் பட்சத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தை இறுதியாக சேர்த்துக் கொள்ளுமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜனாதிபதிக்கு அனுப்புவதற்கான மகஜரை காத்தான்குடி பிரதேச செயலாளரிடம் ஆர்ப்பாட்டக்காரார்கள் கைளித்தனர்.