முடி உதிர்வு பிரச்சினையா?

Published By: Devika

20 Nov, 2022 | 12:45 PM
image

நீண்ட கூந்தலை விரும்பும் பெண்களுக்கு முடி உதிர்வு பிரச்சினை முட்டுக்கட்டையாக அமை­யும். முடி­கள் வலிமையிழந்து, மெலிந்து பலவீன­மடைவது­தான் முடி உதிர்வுக்கான ஆரம்பக்கட்ட அறிகுறி­களாகும். 

முடிக்கு வண்ணம் தீட்டுதல், முடியை நேராக்குதல், முடியை உலர வைப்பதற்கு ஹேர் டிரையர் பயன்­படுத்து­தல், நெருக்கமான பற்களை கொண்ட சீப்புகளை பயன்­படுத்துதல் உள்ளிட்டவையும் முடி உதிர்வுக்கு வித்திடு­கின்றன. 

இத்தகைய பழக்கவழக்கங்களுடன் ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்ளுதல், மிகவும் குறைவான கலோரிகளை கொண்ட உணவு பொருட்களை உட்­கொள்ளுதல், நாளமில்லா சுரப்பிகளின் செயல்­பாடு­களில் கோளாறு ஏற்படுதல் போன்றவையும் முடி உதிர்வுக்கு முக்கிய காரணங்களாக அமைந்தி­ருக்கின்றன. 

பலவீனமான முடியை சரி செய்து முடி உதிர்வை கட்டுப்படுத்த சில வீட்டு வைத்தியங்களை கடைப்­பிடித்தாலே போதுமானது. 

அப்பிள் சிடேர் வினிகர் 

ஒரு டீஸ்பூன் அப்பிள் சிடேர் வினிகர், இரண்டு டேபிள் ஸ்பூன் ஒலிவ் எண்ணெய் ஆகியவற்றுடன் மூன்று முட்டைகளின் வெள்ளைக்கரு கலந்து தலைமுடியில் தேய்க்கவும். பின்பு ‘ப்ளாஸ்டிக் ரெப்’ அல்லது ‘ஷவர் கெப்’பைக் கொண்டு தலையை மூடி அரை மணி நேரம் ஊறவிடவும். பின்பு ஷெம்பூ போட்டு தலைமுடியை அலசி விடலாம். பலவீனமான முடியை சீர்படுத்த இது சிறந்த வீட்டு வைத்தியமாக கருதப்படுகிறது. 

 முட்டை 

முட்டையில் கலந்திருக்கும் புரதம் முடியை வலுப்­படுத்த உதவும். இரண்டு டேபிள்ஸ்பூன் ஒலிவ் எண்­ணெய்­யில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி கிளறவும். தலையில் எண்ணெய் தேய்ப்பது போல் தண்ணீரை லேசாக தடவவும். பின்பு முட்டை கலவையை கூந்தலில் தடவிவிட்டு, 20 நிமிடங்கள் கழித்து குளித்துவிடலாம். முட்டையில் இருக்கும் புரதம் தலைமுடியை கடின­மாக்கும் தன்மை கொண்டது என்பதால் மாதம் ஒரு­முறை மட்டும் பயன்படுத்துவது நல்லது. 

அவகாடோ 

நன்கு பழுத்த அவகாடோ பழத்துடன் முட்டையின் வெள்ளைக்கருவை கலந்து ஈரமான தலைமுடியில் தடவவும். 20 நிமிடங்கள் கழித்து தலைமுடியை தண்­ணீரில் அலசிவிடலாம். அவகாடோ பழத்தில் விட்ட­மின்கள், கொழுப்பு அமிலங்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்­துள்ளன. அவை தலைமுடிக்கு பொலிவு சேர்க்கக் கூடியவை. முடி உதிர்வு பிரச்சினையை எதிர்­கொள்பவர்கள் இந்த கலவையை வாரம் ஒருமுறை பயன்­படுத்தலாம். ஆரோக்கியமான கூந்தல் கொண்ட­வர்கள் மாதம் ஒரு முறை உபயோகிக்கலாம். 

ஒலிவ் எண்ணெய் 

வறண்ட தலைமுடியில் மீண்டும் ஈரப்பதத்தை தக்க­வைக்கும் தன்மை ஒலிவ் எண்ணெய்க்கு உண்டு. ஒலிவ் எண்ணெய்யை லேசாக சூடாக்கி தலையில் தடவி விடவும். பின்பு ‘ஷவர் கெப்’ கொண்டு தலையை மூடிவிடவும். முக்கால் மணி நேரம் கழித்து ஷெம்பூ போட்டு தலைமுடியை அலசி விடலாம். வறண்ட கூந்தல் கொண்டவர்கள் ஒலிவ் எண்ணெய் பயன்படுத்துவது சிறப்பானது.

கற்றாழை சாறு

75 ஊட்டச்சத்துக்கள், 20 தாதுக்கள், 12 விட்டமின்கள் மற்றும் 18 அமினோ அமிலங்களை கொண்ட நம்ப­முடியாத கண்டிஷனிங் ஏஜெண்டாக கற்றாழை செயல்­படுகிறது. முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் தன்மையும் கொண்டது. கற்றாழையிலிருந்து ஜெல் எடுத்து அதனு­டன் சிறிதளவு தேன் மற்றும் ஒலிவ் எண்ணெய் கலக்கவும். இந்தக் கலவையை கூந்தலில் தடவிவிட்டு 30 நிமி­டங்கள் கழித்து குளிர்ந்த நீரில் அலசி விடலாம். 

சந்தன எண்ணெய்

ஒலிவ் எண்ணெய், சந்தன எண்ணெய் இரண்டையும் சிறிதளவு எடுத்து உள்ளங்கையில் நன்றாக தேய்க்க­வும். பின்பு தலைமுடியின் நுனியில் லேசாக தடவவும். தலை­முடி சேதம் அடைவதை தடுப்பதற்கு சந்தன எண்­ணெய் உதவும். 

 வாழைப்பழம்

2 வாழைப்பழங்கள், 2 டேபிள்ஸ்பூன் தேன் மற்றும் 4 டேபிள்ஸ்பூன் ஒலிவ் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து தலைமுடியில் தடவவும். அரை மணி நேரம் கழித்து கூந்தலை அலசி விடலாம். வாழைப்­பழத்தில் உள்ளடங்கியிருக்கும் சிலிகா முடி வளர்ச்சியை தூண்டிவிடும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right