தங்க நகைகள் அணிவதன் அறிவியல் உண்மைகள்

20 Nov, 2022 | 11:54 AM
image

யற்கையாகவே, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுவதற்கான பொரு­ளாக தங்கம் பயன்படுகிறது. பழங்காலத்தில் உடலில் காயங்களும், புண்களும் ஏற்பட்டால் அவற்றுக்கு சிகிச்சை அளிக்க தங்க நகையை பயன்படுத்தினார்கள். பெண்கள் தங்க நகைகள் அணிவதற்குப் பின்னால் பல அறிவியல் மற்றும் உடலியல் சார்ந்த நன்மைகள் அடங்கியுள்ளன. பெண்களின் உடலில் ஏற்படும் பல பிரச்சினைகளுக்குத் தங்க நகை அணிவது தீர்வாகிறது. தங்க நகைகளை பயன்படுத்துவதில் உள்ள அறிவியல் நன்மைகளை நாம் இங்கே காணலாம்: 

உடல் வெப்பத்தை சீராக்குகிறது 

மனித உடலின் வெப்ப நிலை, சுற்றுப்புற வெப்பநிலைக்கு ஏற்றவாறு மாறிக்கொள்ளும். இதனால் சிலருக்கு உடல் வெப்பம் அதிகரித்து பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. தங்க நகை அணியும்போது இயற்கையாகவே உடலின் வெப்பத்தை சீராக்குகிறது. 

காயங்களுக்கான சிகிச்சை 

இயற்கையாகவே, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுவதற்கான பொருளாக தங்கம் பயன்­படுகிறது. பழங்காலத்தில் உடலில் காயங்­களும், புண்களும் ஏற்பட்டால் அவற்­றுக்கு சிகிச்சை அளிக்க தங்க நகையை பயன்­படுத்தினார்கள். இதன் மூலம் காயங்களும் குணமாகும், அவற்றால் ஏற்படும் நோய் தொற்­றும் தடுக்கப்படும். 

வாதத்தை தடுக்கும் மருந்து

தங்க நகை அணிவதன் மூலம் உடம்­பில் நேர்மறை சக்தியை அதிகரிப்பது மட்டு­மில்லா­மல், வாதத்தால் ஏற்படும் அறிகுறி­களையும் கட்டுப்படுத்தும். 

சருமத்தின் பராமரிப்பு 

சருமம் வயதாவதை தடுக்கும் எதிர்ப்பு சக்தி­யாக தங்கம் செயல்படுகிறது. பல அழகு­சாத­னப் பொருட்களிலும், சரும பரா­மரிப்புப் பொருட்களிலும் தங்கத்தை பயன்படுத்துகி­றார்கள். 

மருத்துவ பயன்பாடு

புற்றுநோயை கண்டுபிடிக்கவும் தங்கம் உதவுகிறது. தங்க நகை அணிவதன் மூலம் உடலில் இரத்த ஓட்டம் சீராகி,  நரம்புகள் வலுவாகிறது. உதாரணத்திற்கு காதில் உள்ள நரம்பு கண்களுடன் இணைக்கப்­பட்டி­ருப்பத­னால் காதில் தங்க நகை அணிவதால் கண்­பார்வை அதிகரிக்க உதவுகிறது. அதுபோல, தங்க மூக்குத்தி அணிவதன் மூலம் குறிப்பிட்ட நரம்பு வலுவாகி பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியை குறைக்கிறது. கர்ப்ப காலத்தில் பெண்கள் வயிற்றில் தங்க ஒட்டியானம் அணிவதால் வயிற்றுப் பகுதியில் நரம்புகள் வலுவாகி குழந்தை நலமாக பிறப்பதற்கு உதவுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right