குழந்தைகளின் கால்களின் உயர மாறுபாடு...

Published By: Devika

20 Nov, 2022 | 11:55 AM
image

மனிதனின் இருகால்களும் ஒரே உய­ரத்தில் ஒன்று போலவே தோற்ற­மளிப்­பது இயல்­பானது. ஆனால், சிலருக்கு 2 கால்களில் ஒன்று மட்டும் உயரம் குறைந்தோ அல்லது வளைந்தோ இருப்ப­தற்கு பல காரணங்கள் உண்டு. 

வளரும் பருவத்தில் குழந்தைகளின் தொடை எலும்பின் மேல் பகுதி அல்லது கீழ்ப்பகுதியில் அடிபட்டு வளர்ச்சி குருத்து­களில் முறிவு ஏற்பட்டிருக்கலாம். அடி­­பட்டதும் சில சமயம் இதை சரியாக கண்டு­பிடிக்க முடியாமல் போக­லாம். முறையான வைத்தியம் கிடைக்காமல் இந்த பகுதிகள் சரியாக பொருத்தப்படவில்லை என்றால் வளரும் குருத்துகள் தாறு­மாறாக கூடி­ விடும். இதனால் அந்த காலின் வளர்ச்சி சீராக அமையாமல் குட்டையாகவோ முறுக்­கியபடியோ வளர வாய்ப்பு உண்டாகும். ஒரு கால் உயரம் குறைவாகவோ, வளை­வாகவோ அமைவதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன. குழந்தைகளுக்கு அதுவும் மூன்று மாதங்களுக்குள் இருப்பவர்­களுக்கு இடுப்பு மூட்டில் சீழ்பிடித்து, சரி­யான நேரத்தில் முறையான சிகிச்சை கொடுக்கப்படவில்லை என்றால் தொடை எலும்­பின் மேல்பாகமும் அதை சார்ந்த குருத்­துப் பகுதிகளும் அழிந்தே போய்­விடும். 

இதுபோன்ற வேதனைகள் கால் மூட்டு சார்ந்த குருத்து மற்றும் கணுக்கால் மூட்டு சார்ந்த குருத்தெலும்பு பகுதிகளிலும் உண்­டாகி, அந்த கால் உயரம் குறைவா­கவும், சிறுத்தும் போவதற்கு வாய்ப்பு ஏற்படும். ‘செப்டிக் ஆர்த்ரைட்டிஸ்’ எனும் கொடிய சீழ்பிடிப்பு நோயினால் தன் தனித்தன்மையை, வடிவத்தை இழந்த தொடை எலும்புகளும் உண்டு. 

குழந்தைகள் தவழும் பருவத்திலோ, தளிர்நடை வயதிலோ தொடைப் பகுதி­யிலோ அல்லது காலிலோ வீக்கம் ஏற்பட்டு காய்ச்சல் வந்தால் பெற்றோர், அதை அலட்சியப்படுத்திட வேண்டாம். உடனே தகுந்த வைத்தியரிடம் ஆலோசனை செய்வது கட்டாயம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04