வவுனியால் மற்றுதொரு ஆலயம் தொல்பொருளியல் பிரிவால் ஆக்கிரமிப்பு ? - தொல்பொருளியில் பிரதேசமாக பிரகடனம்’

Published By: Digital Desk 2

20 Nov, 2022 | 09:29 AM
image

(ஆர்.ராம்)

வவுனியா நெடுங்கே நொச்சியடி ஐயார் ஆலயமும் தொல்பொருளியல் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து குறித்த ஆலயமும் ஆக்கிரமிக்கப்படும் அபாயங்கள் உள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த ஐயனார் ஆலயமானது இந்துக்களின் வேள்வி வழிபாட்டு இடமாக வரலாற்றுக்காலமாக இருந்து வந்த நிலையில் தற்போது தொல்பொருளியல் பிரதேசமாக பிரகனடப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்ட திடீரென பாதாகையொன்று நாட்டப்பட்டுள்ளது.

வெடுக்குநாறி ஆதிசிவன் ஐயனார் ஆலயத்திலிருந்து சுமார் எட்டுக் கிலோ மீற்றர் தொலைவில் உள்ள இந்த ஆலயத்தினை அண்மித்த பகுதியில் அண்மைய நாட்களில் புதையல்கள் தோண்டப்படுவதற்கு எத்தனிப்புச் செய்யப்படுவதாக  கூறப்பட்டு பொலிஸார் அவ்வப்போது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.

சிலநாட்களின் பின்னர் பௌத்த தேரர்கள் சிலரும் இவ்வாலயத்திற்கு வருகை தந்ததோடு ஆலயத்தின் வளாகத்தினை பார்வையிட்டுச் சென்றிருந்தனர்.

இவ்வாறான பின்னணியிலேயே குறித்த ஆலய வளாகம் தொல்பொருளியல் பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டு அறிவித்தல் பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் குறித்த ஆலயம் தொடர்பில் சில முக்கியமான வரலாற்றுத் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

அதனடிப்படையில், வவுனியா வடக்கில் நெடுங்கேணி, தெற்கு கிராமசேவர் பிரிவில் சிவாநகர் கிராமத்தில் நொச்சியடி ஐயனார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயமும் கல்வெட்டுக்கள் காணப்படும் இடமும் இணைந்த ஒரு ஹெக்டெயர் பரப்பளவு புளியங்குளத்திலிருந்து நெடுங்கேணி செல்லும் பிரதான வீதியில் நெடுங்கேணிப் பிரிவு ஆரம்பிக்கும் எல்லையில் காணப்படுகின்றது.

பிரதான வீதியில் இருந்து 300மீற்றர் தொலைவில் பிரதான ஐயனார் ஆலயம் அமைந்துள்ளது. குறித்த ஆலயத்திற்கு செல்லும் வழியில் பிள்ளையார் கோவில் காணப்படுகின்றது. தற்போது பழைய பிள்ளையார் கோவிர் மீள்நிர்மாணம் செய்யப்பட்டு புதிய கோவில் அமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன்ரூபவ் புதிய கோவில் நிர்மாணத்தின்போது, மூசிக வாகனம் கண்டெடுக்கப்பட்டதோடு குறித்த வாகனம் ஆய்வுக்குரியதாக உட்படுத்தபட வேண்டிதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த பிள்ளையார் ஆலயமும் ஐயனார் ஆலயமும் அமைந்துள்ள பகுதிக்கு இடையில் உள்ள கேணிக்கு நடுவே நொச்சி மரம் காணப்படுவதானது, நெடுங்கேணி என்ற பெயர் வருவதற்கு அடிப்படையாக உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அத்துடன், ஐயனார் ஆலயத்தினை அடுத்து, சிறுசிறு மலைக் குன்றுகள் காணப்படுகின்றன. அதிலொன்று எழுத்துமலையென்று அழைக்கப்படுகின்றது.

குறித்த மலையில் உள்ள எழுத்துக்கள் தமிழ் பிராமிக் கல்வெட்டு எழுத்துக்களாக உள்ளன. இந்த எழுத்துக்கள் கி.பி.இரண்டு முதல் ஐந்தாம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்டவை என்று 2014இல் ஆய்வுகளை மேற்கொண்ட பேராசிரியர் சி.பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவர் அதனை உறுதிப்படுத்தும் முகமாகரூபவ் குறித்த மலைக்குன்றில் வேள்நாகன் மகன் வேள் கண்ணன் என்று பொறிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டினார்.

இதனால் இந்த ஆலயம் இயக்கர்ரூபவ் நாகர் வாழ்ந்த காலத்திற்குரியவை என்று கணிக்கப்பட்டுள்ள போதும், அதுபற்றிய ஆய்வுகள் மேலதிகமாக செய்யப்பட வேண்டியுள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது.

இவ்விதமான தமிழ் வரலாற்றுப் பின்னணியை கொண்ட பகுதியே திடீரென ஆய்வுகளை மேற்கொள்வதற்கு தயாராகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17