பாடசாலை பொருட்களின விலை அதிகரிப்பு குறித்து அவதானம் செலுத்தப்படும் - ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய

Published By: Nanthini

19 Nov, 2022 | 09:14 PM
image

(இராஜதுரை ஹஷான்)

செஸ் வரி திருத்தம் பாடசாலை உபகரணங்களின் விலைகளில் தாக்கம் செலுத்தவில்லை. சந்தையில் பாடசாலை பொருட்களின விலை அதிகரிப்பு குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்தார்.

செஸ் வரி அதிகரிப்பினால் பாடசாலை மாணவர்கள் அன்றாடம் பயன்படுத்தும் உபகரணங்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளதாக வெளியிடப்படும் தகவல் தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று சனிக்கிழமை (நவ 19) விளக்கமளிக்கையில் இவ்வாறு தெரிவித்த அவர், மேலும் குறிப்பிட்டதாவது,

செஸ் வரி அதிகரிப்பினால், பாடசாலை மாணவர்கள் அன்றாடம் பயன்படுத்தும் உபகரணங்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டப்படுகின்றது. 

இறக்குமதி செய்யப்படும் அச்சு மற்றும் அப்பியாச புத்தகங்கள், பென்சில், அழி இறப்பர் உள்ளிட்ட பொருட்களை உற்பத்தி செய்வதற்கான காகிதம் உள்ளிட்ட ஏனைய பொருட்களுக்கு கடந்த 15ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட செஸ் வரி திருத்தத்தில் மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை.

எனவே, செஸ் வரி திருத்தத்தினால் இறக்குமதி மற்றும் உள்ளூர் உற்பத்தியாளர்களினால் பாடசாலை உபகரணங்களின் விலைகளில் எவ்வித அதிகரிப்பும் செய்யப்படவில்லை. 

எனவே, செஸ் வரி திருத்தம், பாடசாலை உபகரணங்களின் விலைகளில் தாக்கம் செலுத்தவில்லை.

தேசிய மட்டத்தில் காலணி மற்றும் புத்தகப்பை இறக்குமதி செய்யப்படுகிறது. தேசிய உற்பத்திகளை மேம்படுத்தும் நோக்கில் இறக்குமதி செய்யப்படும் காலணி மற்றும் புத்தக பை ஆகியவற்றுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை உபகரணங்களின் விலை சந்தையில் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறித்து அவதானம் செலுத்தப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 21:07:31
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10