பெப்டிக் அல்சரை தவிர்க்கலாமே..!

Published By: Robert

01 Dec, 2016 | 01:09 PM
image

இன்றைய நவீன வாழ்க்கையில், எம்மில் பலரும் அல்சர் என்ற இரைப்பைப் புண்ணுடனேயே வாழ்கிறோம். அத்துடன் இதணை வயது வேறுபாடின்றி, பாலின வேறுபாடின்றி அனைவரும் எதிர்கொள்ளும் பிரச்சனையாகவும் இருந்து வருகிறது.

எமது, இரைப்பையில், புரத உணவை செரிமானம் செய்ய, இரைப்பை, ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை சுரக்கின்றது. ஒரு நாளில், கிட்டத்தட்ட 1.5 லீற்றர் அளவிற்கு இந்த ஹைட்ரோகுளோரிக் அமிலம் சுரக்கிறது. இந்த அமிலம், எமக்கு உணவு செரிமானம், கிருமி எதிர்ப்பு, விற்றமின்கள் உட்கிரகிப்பு என பல வகைகளில் பயன்படுகிறது.

இரைப்பையில் இந்தஅமிலம் அதிகமாகச் சுரக்கும்போது இரைப்பை, முன்சிறுகுடல் ஆகியவற்றிலுள்ள மியூகஸ் என்ற படலம் சேதமடைவதையே இரைப்பை அழற்சி (Gastritis) என்கிறோம்.தொண்டையில் தொடங்கி, உணவுக்குழாய், இரைப்பை, முன்சிறுகுடல் ஆகியவற்றில் ஏற்படும் புண்களை ‘பெப்டிக் அல்சர்’ என்கிறோம் 

காரம் நிறைந்த, புளிப்பு மிகுந்த, மசாலா கலந்த உணவு, எண்ணெயில் பொரித்த உணவு வகைகளை அதிகமாகச் சாப்பிடுவது, மது அருந்துதல், புகைபிடித்தல், குளிர்பானம், கோப்பி, தேநீர் அதிகமாகக் குடிப்பது, உணவை நேரம் தவறிச் சாப்பிடுவது,மனக்கவலை, பணியில் பரபரப்பு, கோபம், தூக்கமின்மை போன்ற காரணிகளும் இரைப்பைப் புண் வருவதைத் தூண்டுகின்றன. அத்துடன் வேறு சிலருக்கு கலப்பட உணவு, மாசடைந்த நீர் ஆகியவற்றில்,இருக்கும் ஹெலிக்கோபாக்டர் பைலோரி' (Helicobacter pylori) எனும் கிருமிகளும் இத்தகைய இரைப்பைப் புண்ணை உண்டாக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது.

அல்சரின் முதல் அறிகுறி நெஞ்சுப் பகுதியில் எரிச்சல் ஏற்படுவதுதான். மேலும் பசியின்மை, புளித்த ஏப்பம் உண்டாகும்.மேலும், இரைப்பை காலியாக உள்ள நள்ளிரவு நேரங்களிலும், விடியற்காலையிலும் மேற்புற வயிற்றில் அடிக்கடி வலி வரும். இத்தகைய அறிகுறிகள் தெரிந்தால் சற்று தாமதியாமல் இரைப்பை சிறப்பு மருத்துவரிடம் என்டோஸ்கோப்பி செய்துகொள்ள வேண்டும். இதனை புறகணித்தாலோ அல்லது அலட்சியம் செய்தாலோ ஒரு சிலருக்கு குடலில் துளை, (DU perforation) விழுவதற்கான வாய்ப்பும் உள்ளது

வயிற்றுப் புண் வராமல் இருக்க தினமும் 3 வேளை உணவையும் குறிப்பிட்ட நேரத்தில் உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். வேகவைத்த தெற்காசியப் பாரம்பரிய உணவு வகைகள் நன்மை தரும். துரித உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை முற்றாக தவிர்க்கலாம். தேவையான அளவிற்கு, சுத்தமான தண்ணீர் பருகுவதும் வயிற்றுக்கு ஏற்றது.

டொக்டர் எஸ் அசோக் M.S.,

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29