'கலைத்தென்றல்' ஹாமித் முகம்மது சுஹைப்

19 Nov, 2022 | 03:51 PM
image

மன்னார் மாவட்ட செயலகமும் மன்னார் மாவட்ட கலை பண்பாட்டுப் பேரவையும் இணைந்து வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள அனுசரனையில் கடந்த புதன்கிழமை 16 ஆம் திகதி மன்னார் மாவட்ட செயலகத்தில் மன்னார் அரசாங்க அதிபர் திருமதி அ. ஸ்ரான்லி டிமெல் தலைமையில் நடத்திய விழாவில் 2022 ஆம் ஆண்டுக்கான விருதுகள் பெற்றவர்களில் 15 கலைஞர்களில் ஒருவரான ஹாமித் முகம்மது சுஹைப் மன். 'கலைத்தென்றல்'  விருதை பெற்றுள்ளார்.

சிலாவத்துறையில் 1967 இல் பிறந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை சிலாபத்துறையில் அ.மு.க. பாடசாலையிலும் உயர் கல்வியை  முசலி தேசியபாடசாலையிலும் கற்றார்.

பின் ஆசிரியராக முசலி கோட்டமட்ட பல பாடசாலைகளிலும் பணியாற்றியுள்ளார்.

பாடசாலை கோட்டமட்ட சுற்றாடல் முன்னோடி ஆணையாளர் ஆன இவர் சுற்றாடல் முன்னோடி ஆலோசகர் ஏ. எச். எச். எம். ஹாபி அவர்களுடன் இணைந்து ஜனாதிபதி கௌரவ விருதை மாணவர்கள் ஜனாதிபதி மாளிகையில் பெற்றுக்கொள்ள வழிவகுத்தார்.

சமூகத்துக்காக அயராது தூய பணி புரிந்தமைக்காக கலைகலாச்சார ஒன்றியத்தினால் இரத்தினபுரியில் சர்மசிறி தேச கீர்த்திப் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

அகில இலங்கை சமாதான நீதவான் ஆகிய இவர் தேசமானிய தேச அபிமானிய ஆகிய விருதுகளை பெற்றுள்ளார். கவிதை மற்றும் இலக்கிய துறையில் இவரது திறமையினைப் பாராட்டி இதய நிலா எனும் புனைப் பெயரால் அழைக்கப்பட்டு வருகின்றார்.

2015ம் ஆண்டு கண்டி கெப்படிக்பொல ஞாபகார்த்த அரங்கில் மலையக கலை கலாச்சார சங்கத்தின் ஏற்பாட்டில் இரத்திதீப் விழாவில் 'இரத்தின தீபம்' விருது வழங்கி இவர் கௌரவிக்கப்பட்டார்.

மன்னார் மாவட்ட கலைபண்பாட்டு வளர்ச்சிக்கு இவர் ஆற்றிவரும் சேவையைப் பாராட்டி முசலி பிரதேச கலை பண்பாட்டுப் பேரவையின் பரிந்துரையின் பிரகாரம் மன்னார் மாவட்ட கலை பண்பாட்டுப் பேரவை இவருக்கு 'மன். கலைத்தென்றல்' விருது வழங்கி கௌரவித்தது.

(வாஸ் கூஞ்ஞ)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகக் கல்வியியல்...

2024-04-18 20:23:36
news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08