வடக்கு மாகாண சபையின் விவசாய அமைச்சினால் வருடந்தோறும் நடாத்தி வருகின்ற மரநடுகை செயறிட்டம் இந்த முறை கிளிநொச்சியில் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதில் வடக்கு மாகாணத்திற்கான நிகழ்வு கிளிநொச்சி கோவிந்தன் கடைச் சந்திக்கருகில் உள்ள இரணைமடு இடது கரை வாய்க்காலின் அருகில் காணப்படுகின்ற ஒதுக்கீட்டு நிலத்தில் மரநடுகை செயற்திட்டம்  இடம்பெற்றது.

பிரமாண்டமாக  ஒழுங்கு செய்யப்பட்டு  பல இலட்சங்கள் செலவு செய்து நிகழ்வு நடத்தப்பட்டிருந்து. வடக்கு மாகாண முதலமைச்சர் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு மரங்களை நாட்டி வைத்துள்ளார். இதனை தவிர அங்கு கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் உறுப்பினர்கள் அனைவரும் குறித்த இடத்தில் மரங்களை நாட்டி வைத்துள்ளனர்.

ஆனால் தற்போது பெய்த மழை காரணமாக அந்த இடம் குளம் போன்று காட்சி அளிப்பதோடு நாட்டப்பட்ட மரங்களும் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மருதம் மரங்களின் மாதிரி பூங்காவுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள இடத்தில் குளம் போன்று நீர் இன்னும் ஒரு சில மாதங்களுக்கு காணப்படும் எனவும், தெரிவு செய்யப்பட்ட இந்த இடம் பொருத்தமற்றது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

மருத மரங்களின் மாதிரி பூங்கா உருவாக்கும் வகையில் மருதம் எனும் பெயரில் குறித்த இடம் தெரிவு செய்யப்பட்டது. இதனால் இந்த பகுதியில் உள்ள பொது மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.