அம்மாக்களின் கவனத்துக்கு...

Published By: Ponmalar

19 Nov, 2022 | 12:48 PM
image

பெண் பிள்ளைகள் பூப்படைதலை பருவமடைதல் என்று கூறுவோம். இந்த காலகட்டத்தில் பெண்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் வரும். அந்த சந்தேகங்களை தாய்தான் பொறுமையாக சொல்லித்தர வேண்டும்.

எல்லா பெண்களுக்கும் பருவம் அடையும்போது மாதவிலக்கு வருவது இயல்பு. இதில் பயப்பட ஒன்றுமில்லை என்பதை வெளிப்படையாகக் கூறுங்கள்.

மாதவிலக்கு பற்றிய ஏதாவது கட்டுரைகள், தகவல்கள் இருந்தால் அதை அவர்களிடம் காட்டலாம்.

பிறப்புறுப்பிலிருந்து இரத்தம் வருவதைப் பார்த்து சிறுமிகள் திகிலடைந்துவிடுவர். இது இயல்பு, இவ்வளவு இரத்தம் வெளியேறும், அந்த சமயத்தில் தலையும் முதுகும் வலிக்கும், அவ்வப்போது முகம் வெளுத்தது போல இருக்கும்.

மனநிலையில் ஏற்ற இறக்கம், கோபம், சிடுசிடுப்பு போன்றவை இருக்கும். இதெல்லாம் இந்த சமயத்தில் வரும் அறிகுறிகள் என செல்லித் தரவேண்டும்.

அந்தரங்க சுத்தம் அவசியம் என்பதையும் அதற்கான காரணங்களையும் சொல்லித் தாருங்கள்.

மாதவிலக்கு காலத்தில் கொஞ்சமாக சாப்பிட வேண்டும், அடிக்கடி குளிக்கக்கூடாது, எல்லாவற்றிலும் இருந்து ஒதுங்கியிருக்க வேண்டும், படிக்கக்கூடாது, உடல் சார்ந்த எந்த வேலையையும் செய்யக்கூடாது, விளையாடக்கூடாது என்றெல்லாம் தப்புத் தப்பாக சொல்லிக் கொடுக்காதீர்கள்.

எப்படி மாதவிலக்கு காலத்தில் செனிட்டரி நப்கினை பயன்படுத்த வேண்டும் என்பதை சொல்லுங்கள்.

மார்பக வளர்ச்சிக் காலத்தில் இறுக்கமான ப்ராக்களை அணியக்கூடாது என்பன போன்ற சந்தேகங்களை தயங்காமல் சொல்லிக் கொடுங்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right