சரியான முடிவு

Published By: Ponmalar

19 Nov, 2022 | 12:11 PM
image

கேள்வி: 


எனது கணவர் மாதம் அறுபதாயிரம் ரூபா வரை உழைக்கிறார். ஆனால், ஆகக்கூடியது பதினையாயிரம் ரூபா மட்டுமே குடும்பத்துக்காக செலவிடுவார். மீதிப் பணம் எல்லாம் அவரது மது, சிகரெட் பழக்கத்துக்கே சரியாகிவிடுகிறது.

தினமும் குடித்துவிட்டு வந்து கெட்ட வார்த்தைகளை பேசி சண்டை போட்டுவிட்டு, உடலில் துணியே இல்லாமல் நிர்வாணமாக கிடப்பார்.

அந்த நிலையிலும் என்னுடன் உறவு கொள்ள முயற்சிப்பார். வெறுப்பாக இருக்கிறது. எனக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் இனியும் அவருடன் சேர்ந்து வாழ முடியுமா என்று தெரியவில்லை. விவாகரத்துச் செய்யலாம் என்று இருக்கிறேன். அது சரியா?

பதில்:
சரியாக இருக்கலாம்! உங்கள் கணவரின் பழக்கத்தை மாற்ற நீங்கள் பல வழிகளிலும் முயற்சித்திருப்பீர்கள். அவை பயன் தராத நிலையில்தான் இப்போது நீங்கள் இந்த முடிவை எடுத்திருக்கிறீர்கள். எனவே, இது சரியான முடிவாகவே இருக்கும்.

விவாகரத்து வரை வந்துவிட்ட நீங்கள் இன்னும் ஓரிரு விடயங்களை மட்டும் செய்து பாருங்கள். விவாகரத்து பற்றி உங்கள் கணவரிடம் உறுதியாக கூறிப் பாருங்கள். கணவர் உங்களைத் தாக்குவாராயின், அது குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யுங்கள். அல்லது குடித்துவிட்டு முழு போதையில் இருக்கும்போது நீங்களும் திருப்பித் தாக்குங்கள். இது ஒரு அதிர்ச்சி வைத்தியம்தான். இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சகஜ நிலைக்குத் திரும்புவதற்கு சாத்தியம் உண்டு.

இது எதுவும் சரிவராவிட்டால், தாராளமாக நீங்கள் விவாகரத்து செய்துகொள்ளலாம். ஆடைத் தொழிற்சாலைகளில் பயிலுநர்களுக்கே மாதம் 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைக்கிறது. அதைக் கொண்டு உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் பராமரித்துக்கொள்ள முடியும். இப்படிக் கிடந்து அவஸ்தைப்பட வேண்டிய தேவையில்லை. மேலும், உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை சிறப்பாகக் கட்டமைக்க முடியும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்