8 சட்டமூலங்களை சான்றுரைப்படுத்தியதாக சபாநாயகர் சபைக்கு அறிவிப்பு

Published By: Digital Desk 5

18 Nov, 2022 | 04:33 PM
image

(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்)

அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம்,பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட எட்டு சட்டமூலங்களை சான்றுரைப்படுத்தியதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு அறிவித்தார்.

பாராளுமன்றம் வெள்ளிக்கிழமை (18) காலை 09.30 மணிக்கு கூடியதை தொடர்ந்து சபை நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் போது சபாநாயகர் மேற்கண்டவாறு அறிவிப்பை விடுத்தார்.

இதற்கமைய சிறுகோரிக்கை நீதிமன்றங்களின் நடவடிக்கை,நீதித்துறை (திருத்தம்),மாகாணங்களின் மேல் நீதிமன்றம் (சிறப்பு ஏற்பாடுகள்) (திருத்தம்),குடியியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்தம்),கண்டிய திருமண,மணநீக்கம் (திருத்தம்),குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்தம்) சிறுவர்கள் மற்றும் இளம் ஆட்கள்(திருத்தம்) மற்றும் அபாயகரமான விலங்குகள் (திருத்தம்) ஆகிய சட்டமூலங்கள் சான்றுரைப்படுத்தப்பட்டன.

இந்த சட்டமூலங்கள் 2022 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க சிறுகோரிக்கை நீதிமன்றங்களின் நடவடிக்கைமுறை சட்டம்,2022 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க நீதித்துறை (திருத்தம்) சட்டம்,2022 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க மாகாணங்களின் மேல் நீதிமன்றம் (சிறப்பு) ஏற்பாடுகள் ,2022 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க குடியியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை சட்டம்,2022 ஆம் ஆண்டின் 37 ஆம் இலக்க கண்டிய திருமண,

மணநீக்கம் சட்டம்,2022 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்தம்) சட்டம் மற்றும் 2022 ஆம் ஆண்டின் 39 ஆம் இலக்க சிறுவர்கள் மற்றும் இளம் ஆட்கள் (திருத்தம் ) சட்டம் மற்றும் 2022 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க அபாயகரமான விலங்குகள் (திருத்தம்) சட்டம் என்ற பெயரில் நேற்று முன்தினம் 17ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்தன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27