அமெரிக்காவின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் இதுவரை தான் வகித்து வந்த தொழில் சார் அத்தனை பொறுப்புகள் மற்றும் பதவிகளில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவரான டொனால்ட் டிரம்ப் உலகம் முழுவதும் பல்வேறு தொழில்கள் இருப்பதுடன் தொழில் சார்ந்த பல பொறுப்புகளையும் வகித்து வருகிறார்.

இந்நிலையில், டொனால்ட் டிரம்ப் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் நேற்று அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளதால் அரசுப் பணியில் தனது முழுக்கவனத்தையும் செலுத்தும் வகையில் தனது சொந்த தொழிலில் ஈடுப்பட மாட்டேன்.மேலும், தொழில் சார்ந்த பதவிகள் மற்றும் பொறுப்புகளிலும் இனி நீடிக்க மாட்டேன் என அதிரடியாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதி ஊடகவியலாளர்களை சந்திக்க உள்ளதாகவும், அப்போது அமெரிக்காவை மீண்டும் மிகப்பெரிய வல்லரசு நாடாக மாற்ற தேவையான தனது திட்டங்கள் பற்றி அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.