இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாபெரும் ஓவியப் போட்டி 

Published By: Nanthini

18 Nov, 2022 | 03:22 PM
image

லங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அடுத்த வருடம் நாட்டின் பெருமையை பறைசாற்றும் வகையில் மாபெரும் ஓவியப் போட்டி மற்றும் கண்காட்சியை ஏற்பாடு செய்ய எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் தெரிவித்துள்ளார். 

இதன்போது நாட்டின் திறமையான கலைஞர்கள் அனைவரையும் இணைத்துக்கொள்ள உள்ளதாகவும், புதிய கலைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார். 

கொழும்பு லயனல் வென்ட் கலையரங்கில் நேற்று வியாழக்கிழமை (நவ 17) பிற்பகல் நடைபெற்ற சித்திரக் கலைஞர் எச்.எஸ். சரத்தின் 50ஆவது தனிப்பட்ட ஓவியக் கண்காட்சியை திறந்துவைத்து உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். 

ஜனாதிபதி கண்காட்சியை பார்வையிடும் சந்தர்ப்பத்தில், கண்காட்சியை பார்வையிட வந்த இரு பாடசாலை மாணவிகளால் இந்நாட்டின் கல்வி முறையை எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்து தொகுக்கப்பட்ட திட்டக்குறிப்பொன்றும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

மேலும், அங்கு ஜனாதிபதி கருத்து தெரிவிக்கையில், 

எச்.எஸ்.சரத்துடனான எனது உறவு நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக தொடர்கிறது. நான் இளைஞர் விவகார அமைச்சராகவும், கல்வி அமைச்சராகவும் இருந்த காலத்தில் அவரது கண்காட்சிகளில் கலந்துகொண்டேன். 

இளைஞர் விவகாரங்கள் மற்றும் கல்வி அமைச்சின் பணிகளில் அவரை பங்கேற்கவும் செய்தேன். அதன் மூலம் அவருடைய சித்திரக் கலை தொடர்பான திறமையை அடையாளம் காணும் வாய்ப்பும் கிடைத்தது.

கல்வி அமைச்சு இசுருபாயவுக்கு மாற்றப்பட்டபோது, எச்.எஸ். சரத்திடம் அமைச்சர் அலுவலகத்துக்கு ஓர் ஓவியத்தை வழங்க முடியுமா என்று கேட்டேன். அன்று அவர் செலலிஹினியை சித்திரிக்கும் பெரிய ஓவியமொன்றை கொடுத்தார்.

எனக்குத் தெரிந்தவரை துரதிர்ஷ்டவசமாக அந்த ஓவியம் இன்று அமைச்சில் இல்லை. 

ஒரு நாள் பெரிய தொகைக்கு விற்கலாம் என்பதால் யாராவது அதனை வீட்டுக்கு கொண்டுபோய் வைத்திருக்கலாம். 

இருப்பினும், எச்.எஸ். சரத் பல்வேறு வகையான பணிகளில் பங்கேற்றார். அவரது திறமை பற்றி புதிதாக கூறத் தேவையில்லை. இந்த ஓவியங்களை பார்த்தாலே புரியும்.

நமது 75ஆவது சுதந்திர தினத்தை அடுத்த ஆண்டு கொண்டாட தயாராகி வருகிறோம். 

சரத் போன்ற திறமையான இளம் கலைஞர்கள் பலர் நாட்டில் உள்ளனர். சரத் அவர்களின் தலைமையில் மற்ற கலைஞர்கள் பங்கேற்கும் மாபெரும் ஓவியப் போட்டி மற்றும் கண்காட்சியை நடத்த நினைத்துள்ளேன்.

இந்தக் கண்காட்சியை பொருத்தமான இடத்தில் நடத்தலாம். அதன் மூலம் எச்.எஸ்.சரத் போன்ற திறமையான ஓவியர்கள் நம் நாட்டில் உருவாகுவர் என்று தெரிவித்துள்ளார்.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, இலங்கை மன்றக் கல்லூரியின் தலைவர் சமன் அதாவுதஹெட்டி உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்த ஓவியக் கண்காட்சி நவம்பர் 18, 19 மற்றும் 20ஆம் திகதிகளில் கொழும்பு லயனல் வென்ட் கலையரங்கில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44