குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டிய பாதுகாப்பு குறிப்புகள்

Published By: Devika

18 Nov, 2022 | 01:15 PM
image

குழந்தைகளுக்கு, ஆபத்து காலத்தில் பாதுகாப்பாக இருப்பது பற்றி கற்றுத்தர வேண்டியது முக்கியமானது. குறிப்பாக, வீட்டில் மின் சாதனங்கள், சமையல் அடுப்பு பயன்படுத்துதல் மற்றும் பிற வேலை­களின்­போது, சில நேரங்களில் தீக்­காயங்­­கள் ஏற்படக்கூடும். அத்தகைய சூழ்­நிலைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்று குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்­டும். அதற்கான சில வழிகளை இங்கு பார்ப்­போம். 

விழிப்புணர்வு:

மின்சார வயர்­களைச் சுற்றி, எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை வைத்து விளையாடு­வதைத் தவிர்ப்பது குறித்து, தெரி­யப்­­படுத்த வேண்டும். வீட்­டில் மின் வயர்கள் சரியான முறையில் சீல் வைக்கப்­பட்டுள்­ளதா? கேஸ் சிலிண்­­டர் ஒழுங்காக மூடப்­பட்­டுள்­ளதா? என்பதை உறுதி செய்ய வேண்­டும். 

விபத்து ஏற்படுவதற்கு அறி­குறியாக இருக்கும் தீப்பொறிகள், புகை போன்றவை ஏற்பட்டால், அதை உடனடி­யாகக் கவனிக்கவும். அதை எப்படிக் கையாள்வது என்பதைக் கற்றுத் தந்தால், பெரிய தீ விபத்துகளைத் தவிர்க்கலாம். இது குறித்து உடனடியாக வீட்டில் உள்ள பெரியவர்களுக்குத் தெரியப்படுத்தவும் கற்றுத் தரவேண்டும். 

பாதுகாப்பு விதிமுறைகள்:

திறந்த நிலையில் மின் வயர்கள் இருந்தால், அவற்றில் இருந்து குறைந்தபட்சம் 5 அடி தூரம் தள்ளி இருக்கப் பழக்க வேண்டும். வயர்களை ஈர­மான கையாலோ, துணியாலோ தொடுவது, ஒரு ப்ளக்கில் பல உபகரணங்களைப் பொருத்தி சார்ஜ் செய்­வது போன்றவற்றைத் தவிர்க்க வேண்­டும். ஒரே நேரத்தில் பல கருவிகளை சார்ஜ் செய்தால், அவை அதிக சூடாகி, விபத்­துக்கு வழிவகுக்கும். தேவையில்லாத சம­­யங்­­களில் வயர்களை ப்ளக்கில் இருந்து எடுப்பது கூடாது. சுவிட்சுகள் சரியாக அணைக்­­கப்பட்டுள்ளதா என்பதைக் கவ­னிப்­ப­தும் அவசியம். 

தப்பிக்கும் வழிமுறைகள்: 

வீட்டில், அவசர காலத்தில் வெளியேறும் வழிகளைப் பற்றி குழந்தைகளுக்கு பயிற்சியளிக்க வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறையாவது, தீ விபத்தின்போது எப்படிச் செயல்பட வேண்­டும் என்று பயிற்சியளிக்க வேண்டும். தப்பிக்கும் வழித்தடத்தில் குறுக்கீடுகள் இருந்தால் அதை அகற்றிச் சுத்தம் செய்து வைத்திருக்க வேண்டும். 

குழந்தைகள் பட்டாசு வெடிக்கும்போது, எதிர்பாராத விதமாக, ஆடைகளில் தீப்­பிடித்தால், பட்டாசை கீழே போடுவது, தரை­யில் உருள்வது போன்ற பாதுகாப்பு வழி­முறைகளை கற்றுத்தர வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்