எம்எச்17 விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டமை தொடர்பில் மூவருக்கு ஆயுள் தண்டனை

Published By: Sethu

18 Nov, 2022 | 09:55 AM
image

மலேஷியாவின் விமாமொன்று 2014 ஆம் ஆண்டு சுட்டு வீழ்த்தப்பட்டு 298 பேர் பலியானமை  தொடர்பான வழக்கில் 3 நபர்களுக்கு நெதர்லாந்து நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

மலேஷிய எயார்லைன்ஸின் எம்.எச்17 விமானம் 2014 ஆம் ஆண்டு யுக்ரைனுக்கு மேலாக பறந்துகொண்டிருந்தபோது வீழ்ந்து நொறுங்கியது. அவ்விமானம் ஏவுகணையினால் சுட்டு வீழ்த்தப்பட்டமை பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது.

நெதர்லாந்தின் ஆம்;ஸ்டர்டாம் நகரிலிருந்து மலேஷியாவின் கோலாலம்பூர் நோக்கி சென்றுகொண்டிருந்த மேற்படி போயிங் 777 ரக இவ்விமானம்  யுக்ரைனுக்கு மேலாக 33,000  அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது சுட்டுவீழ்த்தப்பட்டது. 

இதனால் விமானத்திலிருந்த 298 பேரும் உயிரிழந்தனர். 196 தெர்லாந்து பிரஜைகள், 43 மலேஷிய பிரஜைகள், 38 அவுஸ்திரேலிய பிரஜைகள் உட்பட 10 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அவர்களில் அடங்கியிருந்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் ரஷ்யர்களான ஐகோர் கீர்கின், சேர்ஜி டபின்ஸ்கி, யுக்ரைனியரான லினோனிட் கார்சென்கோ ஆகியோர் குற்றவாளிகளாக காணப்பட்டனர். இம்மூவருக்கும் ஆயுள்தண்டனை விதித்து நெதர்லாந்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இவர்கள் மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படாமலேயே இவ்வழக்கு விசாரணைகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

கீர்கினும், கார்சென்கோவும் ஏவுகணையை ஏவாவிட்டாலும், அதை ரஷ்யாவிலுள்ள இராணுவத் தளமொன்றிலிருந்து குறித்த இடத்துக்கு கொண்டுவந்தமைக்கு பொறுப்பாளிகள் என நீதிபதிகள் தெரிவித்தனர். 

குற்றம்சுமத்தப்பட் மற்றொருவரான ஒலேக் புலாடோவுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லைஎன நீதிபதிகள் தெரிவித்து அவரை விடுதலை செய்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10