15ஆவது ஜேர்மனி வணிகத்திற்கான ஆசிய பசுபிக் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்கிமசிங்க இன்று ஹொங்கொங் பயணமாகிறார்.

ஜேர்மனிய, ஆசிய பசுபிக் பிராந்திய தொழில் முயற்சியாளர் மத்தியிலான தொடர்புகளை வலுப்படுத்துவதற்காக இந்த மாநாடு, இன்று தொடக்கம் சனிக்கிழமை வரை ஹொங்கொங் சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும்.

ஜேர்மனிய மற்றும் ஆசிய பசுபிக்; பிராந்தியத்தைச் சேர்ந்த முன்னணி சட்டவாக்குனர்கள், கல்விமான்கள், பொருளாதார நிபுணர்கள், தொழில் முயற்சியாளர்கள் ஆகியோர் கலந்து கொள்வார்;கள்.  ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதென பிரிட்டன் தீர்மானத்தை அடுத்து நடத்தப்படும் முதல் மாநாடு என்பதால், ஜேர்மனிக்கும், ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கும் முக்கியமானதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.