முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தை வென்றது அவுஸ்திரேலியா

Published By: Sethu

17 Nov, 2022 | 04:56 PM
image

இங்கிலாந்துடனான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட்களால் வெற்றியீட்டியது.

அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் இன்று இப்போட்டி நடைபெற்றது. 

அவுஸ்திரேலியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த  இருபது20 உலகக்கிண்ணத் தொடரில் இங்கிலாந்து அணி சம்பியனாகியது.

அத் தொடரின் பின்னர் பட் கம்மின்ஸ் தலைமையிலான அவுஸ்திரேலிய அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும்; 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரில் விளையாடி வருகின்றன.

இன்று நடைபெற்ற முதலாவது போட்டியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 287 ஓட்டங்களைப் பெற்றது. 

டேவிட் மாலன் 128 பந்துகளில 4 சிக்ஸர்கள், 12 பவுண்டறிகள் உட்பட 132 ஓட்டங்களைக் குவித்தார். பின்வரிசை வீரர் டேவிட் வில்லி 40 பந்துகளில் 34 ஓட்டங்களைப் பெற்றார். 

அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்களில் அடம் ஸம்பா 55 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும்  பட் கம்மின்ஸ் 62 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். 

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 46.5 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 291 ஓட்டங்களைப் பெற்றது.

அவுஸ்திரேலிய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்  டேவிட் வோர்ணர் 84 பந்துகளில் 86 ஓட்டங்களையும்  ட்ரேவிஸ் ஹெட் பந்துகளில் 69 ஓட்டங்களையும் குவித்தனர். ஸ்டீவ் ஸ்மித் 78 பந்துகளில்  ஆட்டமிழக்காமல் 80  ஓட்டங்களைக் குவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22
news-image

ஐ.பி.எல் 2024 : பஞ்சாப் கிங்ஸை...

2024-03-26 00:02:20