மருந்துப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த விலைச் சூத்திரத்தைக் கொண்டு வர முடியாதா - சஜித் அரசாங்கத்திடம் கேள்வி

Published By: Digital Desk 2

17 Nov, 2022 | 04:32 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)

அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதோடு, கிடைக்கும் குறைந்த அளவிலான மருந்துகளின் விலை வேகமாக அதிகரித்து வருவதால் நோயாளிகள் குறித்த மருந்துகளை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

அதனால் மருந்துகளின் விலையை கட்டுப்படுத்த விலை சூத்திரக் கொள்கையொன்றை அரசாங்கத்தால் கொண்டு வர முடியாதா? என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (நவ.17)  நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் சுகாதாரத்துறை தொடர்பில் கேள்வி எழுப்பி உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் இலவச சுகாதார சேவை பல தசாப்தங்களாக நடைமுறையில் உள்ளபோதிலும்,கடந்த இரண்டு வருடங்களில் சுகாதாரத்துறையில் கடுமையான சரிவு ஏற்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதோடு, கிடைக்கும் குறைந்த அளவிலான மருந்துகளின் விலை வேகமாக அதிகரித்து வருவதால் நோயாளிகள் குறித்த மருந்துகளை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

இது ஒட்டுமொத்த மக்களின் ஆரோக்கியத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.எனவே சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் விசேட கவனத்தை உடனடியாக செலுத்த வேண்டியுள்ளது.

இதன் பிரகாரம்,இதனை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாகக் கருதி,அரசாங்கத்திடம் இருந்து பின்வரும் கேள்விகளுக்கு குறிப்பிட்ட பதில்களையும் விளக்கங்களையும் எதிர்பார்க்கிறேன்.

இலங்கைக்கு இறக்குமதி செய்ய வேண்டிய அத்தியாவசிய மருந்து வகைகள் என்னென்ன என்பது குறித்து பட்டியலிடப்பட்டுள்ளனவா?அந்த பட்டியல் இந்த சபையில் சமர்ப்பிக்கப்படுமா? இலங்கை அரச மருந்தக கூட்டுத்தாபனம் மற்றும் பிற இறக்குமதியாளர்கள் ஊடாக இந்த அத்தியாவசிய மருந்துகளை உரிய நேரத்தில் இறக்குமதி செய்வதை அரசாங்கத்தால் உறுதி செய்ய முடியுமா? இதற்காக மாதாந்தம் எவ்வளவு தொகை அந்நியச் செலாவணி தேவைப்படுகிறது? அந்தத் தொகை காலதாமதமின்றி கிடைக்கும் என அரசாங்கத்தால் உத்தரவாதமளிக்க முடியுமா? அந்நோக்கத்திற்காக மட்டும் குறித்த அன்னியச் செலாவணியை ஒதுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா?

தற்போது மருந்துகளின் விலைகள் விலை நிர்ணயக் குழுவொன்றினால் தீர்மானிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விலை நிர்ணயக் குழுவின் உறுப்பினர்கள் யார்? அவர்கள் எந்த தரப்பைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்? அந்த குழுவில் மருந்து இறக்குமதியாளர்கள், மருந்து விநியோகஸ்தர்கள், மருந்து வியாபாரிகள் ஆகியோரை இணைத்து மருந்துகளுக்கு நியாயமான விலையை நிர்ணயம் செய்ய முடியாதா? விலை நிர்ணயக் குழுவுக்குப் பதிலாக, அனைத்து மருந்துகளின் விலையையும் கட்டுப்படுத்த விலை சூத்திரக் கொள்கையொன்றை அரசாங்கத்தால் கொண்டு வர முடியாதா?

சில விநியோகஸ்தர்கள் மருந்தகங்களுக்கு  விநியோகிக்கப்பட்ட மருந்துகளை அவற்றின் காலாவதி திகதிக்குப் பிறகு மீண்டும் மீளப் பெறுவதில்லை என மருந்தக உரிமையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த காலாவதியான மருந்துகளை மருந்தகங்களில் இருந்து சரியாக அகற்ற அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட கொள்கை,செயல்முறையை அறிமுகப்படுத்த முடியாதா? இதற்காக தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாது?

இந்த வருடத்தின் 8 மாத குறுகிய காலப்பகுதியில் கிட்டத்தட்ட 500 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதற்கு மேலதிகமாக பிற சுகாதார நிபுணர்களும் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இது தொடர்ந்து அதிகரிக்குமாக இருந்தால், நாட்டின் சுகாதார கட்டமைப்பு முற்றிலும் வீழ்ச்சியடையும். வைத்தியர்கள் உட்பட சுகாதார நிபுணர்களை இந்நாட்டின் சுகாதார சேவையில் தக்க வைக்க சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாது?

இலங்கையில் மருந்துகளின் இறக்குமதி, விநியோகம் மற்றும் விற்பனைக்கு முழுப் பொறுப்பாக தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையே செயற்படுகிறது.எவ்வாறாயினும், தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையால் மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படைப் பணியான விநியோகஸ்தர்களைப் பதிவு செய்வதில் கடும் தாமதம் ஏற்படுவதால்,மருந்துகளை முறையாக சந்தைக்கு வழங்குவதில் தடைகள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பயிற்றுவிக்கப்பட்ட மருந்தாளுனர்கள் பற்றாக்குறையே இதற்கு காரணமாக அமைந்துள்ளது.மருந்தகங்களை பரிசோதனை செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் உணவு மற்றும் மருந்துப் பரிசோதகர்களை  பணியமர்த்துவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படுவதாக இல்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் யாது?

இலங்கை அரச மருந்தகங்கள் கூட்டுத்தாபனம் கொடுப்பனவுகளைச் செலுத்தாததால் விநியோகஸ்தர்கள் மருந்து விநியோகத்தை நிறுத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது உண்மையா? உண்மையாக இருந்தால்,மருந்து இறக்குமதியாளர்களுக்கு இலங்கை அரச மருந்தகங்கள் கூட்டுத்தாபனம் எவ்வளவு தொகை பணத்தைச் செலுத்த வேண்டியுள்ளது? அந்தக் கொடுப்பனவுகளில் தாமதம் ஏற்படுவதற்கான காரணங்கள் யாது? என்பதை அரசாங்கம் தெரிவிக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04