மக்களை பிழையாக வழிநடத்த பிரதமர் முயற்சிக்கக்கூடாது - எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

Published By: Digital Desk 2

17 Nov, 2022 | 03:02 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)

பாராளுமன்றத்தை கலைப்பதற்கான விதிமுறைகள் அரசியலமைப்பில் இருக்கும் நிலையில், அதனை இல்லை என தெரிவித்து பிரதமர் மக்களை பிழையாக வழிநடத்த முற்படுகின்றார்.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களினால் பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டால், அந்த நிமிடமே பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடைக்கின்றது.

அதனால் மக்களை பிழையாக வழிடந்த வேண்டாம் என பிரதமரை கேட்டுக்கொள்கின்றாேம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (17) விசேட கூற்றொன்றை முன்வைத்து, பாராளுமன்றத்தை கலைக்க முடியாது என பிரதமர் நேற்று (நவ.16)தெரிவித்திருந்த கருத்துக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

பாராளுமன்றத்தை கலைப்பதற்கு அரசியலமைப்பில் எந்த முறைமையும் இல்லை என பிரதமர் சபையில் தெரிவித்திருக்கின்றார்.

பாராளுமன்றத்தை கலைப்பதற்கு அரசியலமைப்பில் விதிமுறைகள் இருக்கின்றன. அதனை புரிந்துகொள்ளாமலே பிரதமர் தெரிவித்திருக்கின்றார்.

அரசியலமைப்பின் 70 (1) அ. பிரிவு மற்றும் ஏ பந்திக்கு அமைய, பாராளுமன்றத்தின் பிரேரணை ஒன்றின் அடிப்படையில் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு முடியுமாகின்றது.

அதனை எப்போது வேண்டுமானாலும் ஜனாதிபதிக்கு செய்ய முடியும். அதேபோன்று அரசியலமைப்பின் பிரகாரம் இரண்டரை வருடங்களுக்கு பின்னர் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடைக்கின்றது.

அதனால் அமெரிக்க முறை இலங்கையில் இல்லை என எமது உறுப்பினர் ஹர்ஷடி சில்வாவை பிரதமர்  அவமதித்திருந்தார்.

அதனால் மக்களை பிழையாக வழிநடத்த வேண்டாம் என பிரதமரை கேட்டுக்கொள்கின்றேன். நாங்கள் நாட்டு மக்களை பிழையாக வழிடத்த எந்த சந்தர்ப்பத்திலும் நடவடிக்கை எடுக்கப்போவதில்லை.

அத்துடன் உரிய காலத்துக்கு தேர்தலை நடத்துவதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவரை சந்தித்தபோது, எமக்கு உறுதியளித்தார்.

ஆனால் அரசாங்கம் ஏதாவது தடைகளை ஏற்படுத்தாமல் இருந்தால்  உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெறும். பைத்தியம் பிடித்த நாயை  குளிப்பாட்ட எடுத்துச்செல்வது போலவே, தேர்தல் நடத்துமாறு தெரிவித்தால் அரசாங்கம் நெலிந்து குழைந்து செயற்படுகின்றது. 

அதனால் அரசாங்கம் மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்ப்பதாக இருந்தால், முதுகெலும்பு இருக்குமானால் தடைகளை ஏற்படுத்தாமல் உரிய காலத்துக்கு தேர்தலுக்கு செல்ல வேண்டும் என்றார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08