உலகின் 800 ஆவது கோடி குழந்தை அடையாளம் காணப்பட்டது

Published By: Sethu

17 Nov, 2022 | 12:54 PM
image

பிலிப்பைன்ஸில் பிறந்த குழந்தையொன்று, உலகின் 800 ஆவது கோடி குழந்தை என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக மக்கள் தொகை கடந்த 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 800 கோடியாக அதிகரித்தது என ஐநா அறிவித்தது.

இந்நிலையில், பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் பிறந்த குழந்தையொன்றே 800 ஆவது கோடி குழந்தை என அறிவிக்கப்ப்டுள்ளது.

மணிலாவிலுள்ள வைத்தியசாலையொன்றில் கடந்த 15 ஆம் திகதி அதிகாலை 1.29 மணிக்கு சுகப்பிரவச முறையில் இக்குழந்தை பிறந்தது.

இக்குழந்தைக்கு வினிஸ் மபன்சாங் என அக்குழந்தையின் பெற்றோர் பெயரிட்டுள்ளனர். 

உலக சனத் தொகை 2010 ஆம் ஆண்டு 700 கோடியாக அதிகரித்திருந்தது, 2037 ஆம் ஆண்டு இத்தொகை 900 கோடியக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right