சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் ; சிறிய தந்தை முறையான உறவினருக்கு கடூழியச் சிறை

Published By: Digital Desk 3

17 Nov, 2022 | 12:51 PM
image

16 வயதுக்கு குறைந்த சிறுமி மீது பாலியல் பாதுஷ்பிரயோகம் செய்து சிறுமிக்கு குழந்தையை பெற்றெடுக்க காரணமாக இருந்த சித்தப்பா முறையான குடும்பஸ்தர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையும் 4 இலட்சம் ரூபா நட்ட ஈடும் செலுத்த வேண்டும் என நீதிபதி இளஞ்செழியன் செவ்வாய்க்கிழமை (15) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதனை கட்டத் தவறும் பட்சத்தில் இரு ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையும், 20 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் கட்டத் தவறும் பட்சத்தில் இரு ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையும் விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.

2014 ஆம் ஆண்டு மே மாதம் வவுனியா, கிழவன்குளம் என்னும் இடத்தில், தாயார் வெளிநாடு சென்றதன் காரணமாக தாயாரின் தங்கையின் வீட்டில் குறித்த 15 வயதுடைய சிறுமி வாழ்ந்து வந்தவேளை தங்கையின் கணவரான சித்தப்பாவினால் குறித்த சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்பின்னர், சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்து, டிஎன்ஏ பரிசோதனை செய்ததன் மூலம் அந்த குழந்தைக்கு, சிறுமியின் சித்தப்பா முறையான உறவினரே தந்தை என உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து நீதிமன்றத்தால் இந்த தண்டனை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தண்டனையை குறைக்குமாறு கோரிய விண்ணப்பம் மன்றினால் நிராகரிக்கப்பட்டது.

15 வயதான சிறுமியை தாயாராக்கியது பாரதூரமான குற்றம் என தெரிவித்து இந்த விண்ணப்பம் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51