நாட்டை சரிசெய்ய முடியாது : எரான் விக்ரமரத்ன

Published By: Digital Desk 2

16 Nov, 2022 | 03:00 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)

நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டுசெல்வதற்கு ஆரம்பமாக அடிப்படை விடயங்களை மேற்கொள்ளவேண்டும். தகுதியுள்ளவர்கள் யாராக இருந்தாலும் அவருக்கு தகுதியான இடத்தை வழங்காதவரை நாட்டை சரிசெய்ய முடியாது.

அத்துடன் ஜனாதிபதி தெரிவிக்கும் சமூக ஒப்பந்தத்தை பின்கதவால் வந்து ஜனாதிபதி ஆசனத்தில் இருந்துகொண்டு இதனை செய்ய முடியாது.

மக்கள் ஆணை அதற்கு இருக்கவேண்டும். மக்கள் ஆணையை பெற்றுக்கொள்ள தேர்தலுக்கு செல்வவேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (நவ. 16) இடம்பெற்ற வரவு - செலவுத் திட்டம் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், 

நிதி அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்திருக்கும் வரவு - செலவுத்  திட்டத்தின் இலக்கங்களை பார்க்கும்போது, அதனை அடைவது என்பது கனவாகவே இருக்கின்றது.

ஏனெனில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை நூற்றுக்கு 15வீதம் வரை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கடன் இடைவெளியை தனி இலக்கத்துக்கும் கொண்டுவருவதற்கு எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

ஆனால் தற்போதுள்ள தேசிய உற்பத்தி வருமானங்களை அடிப்படையாகக்கொண்டும் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை பார்க்கும்போதும் ஜனாதிபதியின் இலக்கங்களை அடைவது கனவாகவே இருக்கும்.

அத்துடன்நாட்டை முன்னேற்றிச்செல்வதாக இருந்தால் இதன் அடிப்படை விடயங்களை சரி செய்யவேண்டும். தகுதியானவர்களுக்கு தகுதியான இடத்தை வழங்கவேண்டும். இதன்போது இனம். மதம் பார்க்கக்கூடாது.

இங்கிலாந்தில் பல வருட காலமாக அந்நாடின் பிரதமராக தெரிவு செய்யப்பட்டு வந்தவர் பைபில் மீது சத்தியப்பிரமாணம் செய்தே பதவிப்பிரமாணம் செய்துவந்திருக்கின்றார்கள்.

ஆனால் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் அந்நாட்டின் பிரதமராக இந்திய வம்சாவனி ஒருவர் தெரிவு செய்யப்பட்டார்.

அவர் பகவத் கீத்தத்தின் மீது சத்தியம் செய்தே பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். அந்த மாற்றம் ஏற்படவேண்டும். அந்த மாற்றத்தை ஏற்படுத்தாதவரை நாட்டை முன்னேற்றிச்செல்முடியாது.

அத்துடன் புதிய சமூக ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் என ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அதனை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்.

ஆனால் பின்கதவால் வந்து ஜனாதிபதி ஆசனத்தில் இருந்துகொண்டு இதனை செய்ய முடியாது. சமூக ஒப்பந்தம் எனும்போது அதில் அனைத்து தரபபினரும் உள்வாங்கப்படவேண்டி இருக்கின்றது. 

அனைத்து தரப்பிரனரையும் உள்வாங்கிக்கொண்டு புதிய சமூக ஒப்பந்தம் செய்வதற்கு மக்கள் ஆணை இருக்கவேண்டும். மக்கள் ஆணை இல்லாமல் இதனை செய்ய முடியாது. அதனால் மக்கள் ஆணையை பெற்றுக்கொள்ள தேர்தலுக்கு செல்லவேண்டும்.

அதேபோன்று நாட்டின் மத்திய வங்கி சுயாதீனப்படுத்தப்பட வேண்டும். இதனை செய்ய நாங்கள் 2019இல் சட்டம் அமைத்தோம். அந்த சட்டத்தை கொண்டுவருமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றோம். 

அதேபோன்று நாட்டின் நிதி அமைச்சராக இருப்பவர்கள் எப்போதும் தனது கட்சிக்கு ஏற்றமுறையில் செயற்படுவதே தவிர நாட்டுக்கு தேவையான முறையில் நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை.

அதனால் நாட்டை முன்னேற்றுவதாக இருந்தால் ஆரம்பமாக அடிப்படை விடயங்களில் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும். தகுதியானவர்களுக்கு தகுதியா இடத்தை வழங்கும் மன நிலையை நாங்கள் ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41