எல்லையைக் கடந்து சட்டவிரோதமாக  கடற்றொழிலில் ஈடுபடுகின்ற வெளிநாட்டு படகுகளுக்கான அபராதத்தை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த கோரிக்கையை  காலியில் நடைபெறும் ஏழாவது சர்வதேச கடல் எல்லை பாதுகாப்பு மாநாட்டில் இலங்கை சார்பில் உரையாற்றிய  அமைச்சர் மகிந்த அமரவீர முன்வைத்தார்.

எல்லையைக் கடந்து கடற்றொழிலில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதனை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் அனைத்து நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் எல்லையைக் கடந்து கடற்றொழிலில்  ஈடுபடுபவர்களுக்கான அபராதத்தை அதிகரிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.