க்ரீன் சப்பாத்தி

Published By: Devika

16 Nov, 2022 | 01:06 PM
image

தேவையான பொருட்கள்

கோதுமை மா - 2 கப்

வேகவைத்த பட்டாணி – ½ கப்

புதினா – ½ கட்டு

கொத்தமல்லித்தழை – ½ கட்டு

பச்சை மிளகாய் - 2

உப்பு - தேவையான அளவு

நெய் - 1 கரண்டி

சீரகத்தூள் - ½ கரண்டி

மசாலா தூள் - ½ கரண்டி

நெய் - சிறிதளவு

செய்முறை

புதினா, கொத்தமல்லி தழையை பச்சை மிளகாயுடன் சேர்த்து நைசாக அரைக்க­வும். அரைத்த விழுதுடன், கோதுமை மா, நெய், மசாலா, சீரகத்தூள், உப்பு, தேவை­யான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து அரை மணி­நேரம் அப்படியே வைக்கவும். 

பிசைந்த மாவை சப்பாத்திகளாக தேய்த்து வைக்கவும். தோசைக்கல் சூடா­னதும் சப்பாத்தியை போட்டு, சிறிதளவு எண்ணெய்விட்டு வெந்ததும் திருப்பி போட்டு சுட்டு எடுக்கவும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்