குழந்தைகளின் பற்களை சீரமைத்தல்

Published By: Devika

16 Nov, 2022 | 01:05 PM
image

முக அழகை அதிகரிப்பதில் பற்­கள் முக்கியமானவை. சீரற்ற பல்வரி­சை­யால் மனதளவில் பாதிக்கப்­படுப­வர்கள் பலர் உள்ளனர். பற்களின் அமைப்பை குழந்தைப் பருவத்திலிருந்தே சீரமைக்கத் தொடங்கினால் எளிதாக இருக்கும். வரிசையாக இல்­லாமல் முன்னும் பின்னுமாக இருக்கும் பல்வரிசையை, ‘ப்ரேஸ்’ எனும் க்ளிப் அமைத்தல் மூலம் ஒழுங்குபடுத்தலாம்.

குழந்தைகளுக்கு 8 முதல் 15 வய­திற்குள் பற்களை சீரமைப்பது சிறந்தது. இந்த வயதில், பற்கள் விழுந்து முளைக்கும் என்பதால், குறைந்த காலத்தில் பற்களை சீர­மைக்க­லாம்.

 குழந்தைகளுக்கு ஏற்ற சில ப்ரேஸ் வகைகள்:

மெட்டல் ப்ரேஸ்:

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் பொதுவாகப் பரிந்துரைக்கப்படுவது ‘மெட்டல் ப்ரேஸ்’. சிறிய உலோகத்தைக் கொண்டு அமைக்கப்படும் இந்த ப்ரேஸ், ஒவ்வொரு பல்லையும் நன்றாகப் பற்றும் வகையில் அமைக்கப்படும். உலோகக் கம்பி இந்த அடைப்புக்­குறிக்குள் சென்று பற்களை ஒன்றாக இணைக்கும். பற்­க­ளுக்கான இடை­வெளியைச் சரி செய்யும் வகையில், எலாஸ்டிக் அமைக்கப்பட்டிருக்கும். சீரான இடைவெளியில் தேவையான இடங்களில் கம்பியை இறுக்குவதால் விரும்பிய பல் அசைவு பெறலாம்.

செராமிக் ப்ரேஸ்:

இந்த செராமிக் ப்ரேஸ் பற்களின் நிறத்திற்கு ஏற்ப இருக்கும். அதை இணைக்கும் கம்பி உலோகத்தால் வடிவமைக்கப்பட்டிருக்கும். உலோகம், செராமிக் இரண்டும் ஒரே கால அள­வை­யும், ஒரே பயன்பாட்டையும் கொண்டி­ருக்கும். இந்த வகை, 10 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்குப் பரிந்துரைக்கப்படும்.

உள்ளடங்கிய ப்ரேஸ்:

சிலருக்குப் பற்கள் வளரும்போது, முன்னும், பின்னுமாக இருக்கும். இதை ஒரே சீராக மாற்ற தகுந்த ப்ரேஸ் பற்களுக்கு உட்புறமாக அமைக்கப்படும் என்பதால், வெளி­­யில் தெரியாது. இந்த அமைப்­பில் பற்களைச் சுத்தம் செய்வதில் மட்டும் சிரமம் ஏற்படும். இதற்கான கால இடைவெளியும் சற்று அதிக­மாகும். 12 வயதிற்கு மேற்பட்ட­வர்க­ளுக்கும், இளைஞர்க­ளுக்கும் இது பரிந்­துரைக்கப்படும்.

க்ளியர் அலைனர்:

இதனை மிகவும் எளிதாக எந்த வயதினரும் அணியலாம். மருத்துவ உதவி தேவையின்றி சுயமாக இதை அணிந்து கொள்ள முடியும். ஒன்லைனில் இந்த வகையான ப்ரேஸ் கிடைக்கும் என்றாலும், மருத்துவரை அணுகி பற்களின் தன்மைக்கேற்ப சரியான அளவை தெரிவு செய்து அணிவது சிறந்தது. சீரற்ற பல் வரிசை இருப்பவர்களுக்கு இது பொருந்தாது.

பராமரிக்கும் முறைகள்:

க்ளிப் அமைத்தபின், உண்ணும் உணவு முதல் அனைத்திலும் கவனம் வேண்டும். ஒவ்வொரு முறை சாப்பிட்ட பிறகும் பற்களைச் சுத்தம் செய்வது அவ­சியம். க்ளிப்களின் இடையில் உண­வுத் துகள் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கேற்ப, ப்ரஷ்­களைத் தெரிவு செய்ய வேண்டும். அதிக அடர்த்தி இல்லாத மவுத் வோஷ்ஷை பயன்படுத்தி வாயை சுத்­தம் செய்வது சிறந்தது.

குறைந்தபட்சம் 3 முதல் 6 மாத இடை­வெளியில் மருத்துவரை அணுகி பற்களைச் சுத்தம் செய்வது அவசியம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29