மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி

Published By: Ponmalar

16 Nov, 2022 | 11:39 AM
image

கிழக்கு மாகாணத்தில் இயங்கி வரும் தன்னார்வ தொண்டு நிறுவனமான ஒன்றுகூடுவோம் இலங்கை நிறுவனத்தால் கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலை மாணவர்களின் தலைமைத்துவ பண்புகளை அதிகரிக்கும் நோக்கில் பயிற்சிகளை அளித்து வருகின்றது.

இந்த நிலையில் அந்த பயிற்சி நிறுவனத்தின் தொடர் ஒழுங்கில் ஓட்டமாவடி கல்விக் கோட்டத்திற்குட்பட்ட வாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலயத்திலும் மாணவர்களுக்கான பயிற்சிகளை அண்மையில் வழங்கியது.

மாணவர்களின் கற்றல் உற்சாகத்தை அதிகரித்து கற்றலை விருப்புக்குரிய செயலாக மாற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளாக இந்த பயிற்சி அமைந்திருந்ததோடு மாறிவரும் உலகில் சவால்களை வெற்றிகொள்ளப்பழகும் சிறார்களை உருவாக்கும் நோக்கில் இந்த பயிற்சி நெறிகள் பாடசாலை மட்டத்தில் நடைபெற்று வருகின்றது.

பெற்றோர்களுக்கான கருத்தரங்குகளை ஒழுங்குபடுத்தி அவர்களது விருப்பங்களையும் பெற்றதன் பின்னரே இந்த பயிற்சி நெறிகள் வழங்கப்பட்டு வருவதாக அதிபர் தெரிவித்தார்.

விளையாட்டு முறை மூலமானதும்,குழச்செயற்பாடுகள் மூலமாகவும் அமையப்பெற்ற இந்த பயிற்சி நெறியில் மாணவர்களுடைய தனிப்பட்ட ஆளுமை பண்புகள் வெளிப்பட சந்தர்ப்பங்கள் அளிக்கப்பட்டு வருவதோடு பிரச்சினை விடுவித்தல் முறையில் அமைந்த கருத்து வெளிப்படுத்தல் செயற்பாடுகளும் இப்பயிற்சி நெறியில் வழங்கப்பட்டன.

மாணவர்களுக்கான சிற்றுண்டி மற்றும் பகல் போசனத்துடன் முன்னெடுக்கப்பட்டு வரும் இப்பயிற்சி நெறி முடிவில் கலந்து கொண்டு பயன்பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

ஓன்றுகூடுவோம் இலங்கை அமைப்பின் கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பாளர் ஜே.எம்.சில்மிர்,நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் கற்கைகள் துறை ஆசிரியை சௌமியா சஜீகரன் மற்றும் நிறுவனத்தின் தொண்டர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08
news-image

திருக்கோணேஸ்வரம் அருள்மிகு மாதுமை அம்பாள் உடனுறை...

2024-04-09 14:10:46